உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வாழும் நாடு இதுதான்.. அமெரிக்கா, துபாய் இல்லை.. எது தெரியுமா?

Published : Mar 13, 2026, 05:43 PM IST

பலரும் நினைப்பதற்கு மாறாக, உலகின் மிகச் செல்வந்தர்கள் வாழும் நாடாக சிறிய நாடு ஒன்று உள்ளது. அது அமெரிக்காவோ, துபாயோ கிடையாது. இந்த நாடு பணக்காரர்களின் விருப்பமான இடமாக திகழ்கிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
14
உலகின் பணக்காரர்கள் வாழும் நாடு

உலகின் மிகச் செல்வந்தர்கள் வாழும் நாடு எது என்று கேட்டால் பலருக்கும் முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் தான் நினைவுக்கு வரும். பொருளாதார வலிமை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உலகளாவிய தாக்கம் காரணமாக இந்த நாடுகள் பெரும்பாலும் பணக்கார நாடுகளாக கருதப்படுகின்றன. ஆனால் உலகின் மிக ஆச்சரியமான செல்வந்தர்கள் வசிக்கும் நாடாக ஒரு நாடு உள்ளது. அது பெரிய நாடாக இல்லாமல், சிறிய நாடாக உள்ளது. அது வேறு எதுவும் இல்லை, ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடான மொனாக்கோ தான் அது.

24
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள்

ஐரோப்பாவின் இரண்டாவது சிறிய நாடாகக் கருதப்படும் மொனாக்கோ, அதன் அளவு சிறியதாக இருந்தாலும் செல்வச் செழிப்பில் உலகின் கவனத்தை ஈர்க்கிறது. மெடிட்டரேனியக் கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த நாடு, ஒரே நேரத்தில் கடற்கரை அழகையும், மலைப்பகுதி இயற்கையையும் கொண்டுள்ளது. பாதுகாப்பு, தூய்மை மற்றும் உயர் தர வாழ்க்கை முறையால் உலகின் வாழ்வில் சிறந்து விளங்கும். மொனாக்கோவில் நிலத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு ஒரு சதுர மீட்டர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது வெறும் ஒரு மீட்டர் நீளமும் அகலமும் கொண்ட நிலத்திற்கே இந்த அளவுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

34
மொனாக்கோ வீட்டு விலை

இதனால் மொனாக்கோ உலகிலேயே மிக உயர்ந்த நில விலையுள்ள பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. வீடு வாங்குவதும் இங்கு மிகவும் செலவாகும். சுமார் 100 சதுர மீட்டர் அளவிலான ஒரு வீட்டின் விலை ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. மொனாக்கோவின் பரப்பளவு மிகவும் குறைவாக இருப்பதால், இங்குள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் உயரமாகவும் நெருக்கமாகவும் கட்டப்பட்டுள்ளன.

44
மொனாக்கோ நாட்டின் வாழ்க்கை முறை

அதிக செலவான வாழ்க்கை முறை இருந்தாலும், மொனாக்கோ உலகின் மிகப் பிரபலமான லக்சுரி வாழ்விடங்களில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக மோண்டே கார்லோ மற்றும் லார்வோட்டோ போன்ற பகுதிகள் உலக பணக்காரர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் இடங்களாக கருதப்படுகின்றன. அதனால் தான் உலகின் மிகச் செல்வந்தர்கள் அதிகமாக வாழும் நாடாக மொனாக்கோ குறிப்பிடப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories