Worlds Cheapest House: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் ஒரு வீடு வெறும் 1 டாலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு படுக்கையறைகள் கொண்ட இந்த வீடு ஏன் இவ்வளவு மலிவாக விற்கப்படுகிறது? அதன் பின்னணி என்ன? முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.
உலகின் மலிவான வீடு.. 1 டாலருக்கு விற்கப்படுவது ஏன் தெரியுமா?
சொந்த வீடு என்பது எல்லோருடைய கனவு. ஆனால், இன்றைய ரியல் எஸ்டேட் விலையில் அது சாத்தியமா? அமெரிக்காவில் ஒரு வீடு வெறும் 1 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 83 ரூபாய்) விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு டீ குடிக்கும் செலவில் ஒரு முழு வீட்டையே வாங்கலாம் என்ற இந்த செய்தி, ரியல் எஸ்டேட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த வீட்டைப் பற்றி இணையத்தில் தேடி வருகின்றனர்.
24
இந்த வீடு எங்கே இருக்கிறது? இதில் என்னென்ன வசதிகள் உள்ளன?
உலகின் இந்த மலிவு விலை வீடு அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ளது. இதன் சரியான முகவரி: 70 E Ypsilanti Avenue, Pontiac, Michigan, USA. இந்த வீட்டில் இரண்டு படுக்கையறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறை உள்ளது. ஒரு சிறிய குடும்பம் வசிக்க இது போதுமானது. இந்த வீட்டின் விளம்பரத்தை ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெளியிட்டதும், அவருக்கு தொலைபேசி அழைப்புகள் வெள்ளம் போல வந்தன. 1 டாலர் வீடு என்றதும் எல்லோரும் ஆச்சரியத்துடன் விசாரிக்கத் தொடங்கினர்.
ரூ. 8 லட்சம் மதிப்புள்ள வீடு.. 1 டாலராக விலை குறைந்தது எப்படி?
இந்த வீடு ஒன்றும் நேற்று இன்று கட்டப்பட்டது அல்ல. இது 1856-ல் கட்டப்பட்டது. ஒரு காலத்தில் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால், பல ஆண்டுகளாக வாடகைக்கு விடப்பட்டதால், குடியிருந்தவர்கள் சரியாகப் பராமரிக்காததால் வீடு மோசமாகச் சேதமடைந்தது. வீட்டின் சுவர்கள், கூரை, தரை என அனைத்தும் பாழாகிவிட்டன. நாளாக நாளாக வீட்டின் நிலை மோசமடைய, அதன் விலை கடுமையாக சரிந்தது. இறுதியில், அதன் உரிமையாளர் இந்த வீட்டை வெறும் 1 டாலருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
வெறும் 1 டாலருக்குக் கிடைத்தாலும், இந்த வீட்டை வாங்க யாரும் முன்வரவில்லை. முக்கிய காரணம், இதைச் சரிசெய்ய ஆகும் செலவுதான். இந்த வீட்டை மீண்டும் குடியிருக்கத் தகுந்ததாக மாற்ற, குறைந்தபட்சம் 20,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 16 லட்சத்திற்கும் மேல்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1 டாலருக்கு வீட்டை வாங்கினாலும், பழுதுபார்க்கப் பெரிய தொகையைச் செலவழிக்க வேண்டும் என்பதால், வாங்குபவர்கள் தயங்குகின்றனர். அதனால்தான் இந்த வீடு இன்னும் விற்கப்படாமல் அப்படியே இருக்கிறது. ஒரு பக்கம் மிச்சிகனில் உள்ள இந்த 1 டாலர் வீடு உலகின் மலிவான வீடாக செய்திகளில் இடம்பிடித்துள்ளது. மறுபுறம், உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளும் உள்ளன. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை (மதிப்பு $4.9 பில்லியன்) உலகின் காஸ்ட்லியான வீடாகக் கருதப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான 'ஆன்டிலியா' உள்ளது. ஒரு பக்கம் பில்லியன் டாலர் அரண்மனைகள், மறுபக்கம் 1 டாலர் வீடு என்பது கவனிக்கத்தக்கது.