திபெத்தின் மேல் ஏன் விமானங்கள் பறப்பதில்லை? இதுக்கு பின்னாடி இவ்வளவு காரணங்கள் இருக்கா?
உலகம் முழுவதும் பல விமானங்கள் பறந்து கொண்டிருந்தாலும், பெரும்பாலான நேரங்களில், திபெத் பகுதியில் பறப்பதில்லை. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
உலகம் முழுவதும் பல விமானங்கள் பறந்து கொண்டிருந்தாலும், பெரும்பாலான நேரங்களில், திபெத் பகுதியில் பறப்பதில்லை. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
உலகம் முழுவதும் பல விமானங்கள் பறந்து கொண்டிருந்தாலும், பெரும்பாலான நேரங்களில், திபெத் பகுதியில் பறப்பதில்லை. இதற்கு என்ன காரணம் தெரியுமா?
திபெத்திய பீடபூமி, "உலகின் கூரை" என்று குறிப்பிடப்படுகிறது, சுமார் 1.2 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இது 8 விமான நிலையங்களை மட்டுமே கொண்டுள்ளது, இவை அனைத்தும் 3,500 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளன. அதுதான் உண்மையான பிரச்சனை. திபெத், கடல் மட்டத்திலிருந்து வெறும் 5 கிமீ உயரத்தில், பூமியின் மேலோட்டத்தின் மிகப்பெரிய பகுதியாக இருக்கிறது.. மேலும், பீடபூமியின் உட்புறம் உள் வடிகால் மற்றும் குறைந்த அரிப்பு விகிதங்களுடன் தட்டையானதாகவும் இருக்கிறது. இந்த புவியியல் அம்சங்கள் வணிக விமானங்களுக்கு பெரும்பாலும் சவாலானதாக கருதப்படுகிறது.
திபெத்திய பீடபூமியில் விமானங்கள் ஏன் பறக்கவில்லை?
திபெத்திய பீடபூமியில் விமானங்கள் பறப்பதைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அதன் தீவிர உயரம். இவ்வளவு அதிகமான உயரம் என்பது விமான இயந்திரங்களின் செயல்திறனை பாதிக்கிறது. மற்றொரு முக்கியமான காரணி வானிலை. இந்த பகுதி கடுமையான மற்றும் கணிக்க முடியாத வானிலைக்கு பெயர் பெற்றது. பலத்த காற்று, கடுமையான கொந்தளிப்பு ஆகியவை விமானங்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த பகுதியில் பயங்கர இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
மற்றொரு முக்கிய கவலை திபெத்தின் நிலப்பரப்பு. இப்பகுதியில் மிகவும் கரடுமுரடான மலைகள் உள்ளன, 7,000 மீட்டருக்கும் அதிகமான சிகரங்கள் உள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் இவ்வளவு உயரமான சிகரங்களில் விமானம் பறப்பது கொஞ்சம் ஆபத்தானது. ஒரு விமானம் எஞ்சின் பிரச்சனைகளை சந்தித்தால், பாதுகாப்பான எமர்ஜென்ஸ் தரையிறக்கத்திற்கான வாய்ப்பு இந்த பகுதியில் இருக்காது.
விமான போக்குவரத்து கட்டுப்பாடு மேலும் சிக்கலை அதிகரிக்கிறது. இப்பகுதியில் விமான நிலையங்கள் மிகக் குறைவு. இதன் பொருள், மிகக் குறைவான விமானக் கட்டுப்பாட்டு வசதிகளே மிகவும் குறைவு. இதனால் விமானிகள் தகவலைப் பெறுவது கடினம். மேற்கூறிய இந்த காரணங்களால் திபெத் பீடிபூமிக்கு விமானங்கள் பறப்பதில்லை.