ஆப்பிரிக்கா இரண்டாகப் பிளந்து, புதிய பெருங்கடல் உருவாகுமா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

பூமியில் தற்போது ஐந்து கடல்கள் உள்ளன, ஆனால் எதிர்காலத்தில் ஆறாவது கடல் உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய பிளவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Africa could split in two, forming a sixth ocean sgb
Africa could split in two

பூமியின் 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன் பெரும்பாலான நீர் பூமியில் ஐந்து பெருங்கடல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், தெற்கு மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்கள் ஆகும். ஆனால் இப்போது உலகில் ஆறாவது பெருங்கடல் விரைவில் உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Africa could split in two, forming a sixth ocean sgb
Africa splitting

கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு பெரிய பிளவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு கடல்கள் மெதுவாக உருவாகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தப் பிளவு ஆப்பிரிக்கக் கண்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஆப்பிரிக்காவின் கிழக்கே சோமாலி தட்டும் மேற்கே நுபியன் தட்டும் உள்ளன. இந்த தட்டுகள் ஒரு சிக்கலான டெக்டோனிக் பாணியில் ஒன்றிணைகின்றன. இந்த தட்டுகள் ஆப்பிரிக்கக் கண்டத்தை இரண்டு தனித்தனி பகுதிகளாகப் பிரிக்கலாம்.


Africa continent splitting map

எதிர்காலத்தில் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதி சிறு கண்டமாக மாற வாய்ப்புள்ளது. தட்டுகள் படிப்படியாக விலகிச் செல்லும்போது, ​​​​பூமியின் மேலோட்டத்திலிருந்து மாக்மா வெற்றிடங்களை நிரப்பி புதிய கடல் மேலோடு உருவாகலாம். இது ஒரு தொடர் செயல்முறை. தென் அமெரிக்காவும் ஆப்பிரிக்காவும் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் இரண்டு தனித்தனி கண்டங்களாகப் பிரிந்தன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Africa could split to form sixth ocean

இது நடந்தால், பூமி ஒரு பெரிய புவியியல் மாற்றத்தைக் காணக்கூடும். ஆப்பிரிக்கக் கண்டம் தொடர்ந்து பிரிந்து வருவதால், கிழக்குப் பகுதி காலப்போக்கில் பிரிந்து சிறிய கண்டமாக மாறலாம். பிளவு விரிவடையும் போது, ​​அதற்குள் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இருந்து தண்ணீர் நிரப்பத் தொடங்கும்.

Africa split and new ocean

இதன் மூலம் புதிய பெருங்கடல் உருவாகலாம். பல்லுயிர் பெருக்கமும் உருவாகலாம். இதனால் மீன்பிடித் தளங்கள், கடல்வழி வர்த்தகப் பாதைகள் போன்ற பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். ஆனால் சில சவால்களும் ஏற்படலாம். குறிப்பாக, விவசாயம், உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் குடியிருப்புகள் பாதிக்கப்படலாம்.

Scientists on Africa splitting

ஆனால் இது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக மெதுவாக நடந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக அது வேகம் பெற்றுள்ளது என 2020ஆம் ஆண்டிலேயே விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால் 2024 இல் தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரு மாபெரும் வெடிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், ஆப்பிரிக்க கண்டத்தின் பிளவு வேகம் பெற்றிருக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Latest Videos

click me!