இப்ராஹிம் ரைசி ஈரானின் கொடுங்கோல் அதிபரா? யார் இவர்? அமெரிக்காவுக்கும் எதிரியா?

First Published | May 20, 2024, 10:23 AM IST

63 வயதான இப்ராஹிம் ரைசி ஈரான் நாட்டின் உச்ச தலைவருக்கு அடுத்த அதிக அதிகாரம் படைத்த பதவியில் இருந்தவர். பழமைவாத மனப்பான்மை கொண்ட ரைசி, இஸ்லாமிய அறிஞர், நீதிபதி, அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.

Iran President Ebrahim Raisi

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசர்பைஜானில் அணை திறப்பு விழாவுக்குச் சென்று திரும்பும் வழியில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் மரணம் அடைந்துள்ளார்.

Iran President Ebrahim Raisi

63 வயதான இப்ராஹிம் ரைசி அதிபர் ஆவதற்கு முன்பு நாட்டின் நீதித்துறையில் நாட்டின் தலைமை அரசு வழக்கறிஞர் போன்ற பல பதவிகளை வகித்தவர். பழமையான மசூதிகளை நிர்வகிக்கும் அஸ்தான் கட்ஸ் ரசாவி அமைப்பின் தலைவராகவும் 2016 முதல் 2019 வரை பணியாற்றியுள்ளார்.

Latest Videos


Iran President Ebrahim Raisi

ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பாதுகாவலராகவும் பார்க்கப்படுகிறார். 85 வயதான கமேனியைப் போல அதிக செல்வாக்கு கொண்டவரான, ரைசி ஈரானின் அடுத்த உச்ச தலைவராக வரக்கூடும் என்று கருதப்பட்டது.

Iran President Ebrahim Raisi

ஈரானின் 2021 அதிபர் தேர்தலில் போட்டுயிடுவதற்கு அலி கமேனியால் அனுமதிக்கப்பட்ட 4 வேட்பாளர்களில் இப்ராகிம் ரைசியும் ஒருவராவர். அந்தத் தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தான் ஈரான் நாட்டின் வரலாற்றிலேயே மிகக் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

Iran President Ebrahim Raisi

1988 இல் ஈரான்-ஈராக் போரின் முடிவில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளை தூக்கிலிட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரைசி என்று அமெரிக்கா கருதுகிறது. அதற்காக அமெரிக்கா ரைசி மீது தடை விதித்துள்ளது. 

Iran President Ebrahim Raisi with modi

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை நேர்காணல் செய்து ஆயிரக்கணக்கான கைதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிந்து. அப்போதைய உச்ச தலைவர் ருஹோல்லாவின் துணைத் தலைவராக இருந்த ஹுசைன்-அலி மொன்டசெரி தனது நினைவுக் குறிப்புகளில் 2,800 முதல் 3,800 பேர் கொல்லப்பட்டதாக எழுதியுள்ளார். ஆனால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 30,000 க்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கைதிகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், டிரக்குகள் மற்றும் கிரேன்களை பயன்படுத்தி அரை மணிநேரத்திற்கு ஆறு பேர் வீதம் தூக்கிலிடப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Iran President Ebrahim Raisi

ரைசி ஆட்சியின் கீழ், ஈரான் யுரேனியத்தை ஆயுதமாக பயன்டுத்தும் நோக்கத்தில் செறிவூட்டுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உக்ரைன் மீதான போரில் ரைசியின் ஈரான் அரசு ரஷ்யாவுக்கு ஆயுத உதவிகள் செய்துள்ளது. அதேபோல் இஸ்ரேல் ஹமாஸ் போரில் காசா பகுதியில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.

Iran President Ebrahim Raisi

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவினருக்குத் தொடர்ந்து ஆயுத சப்ளை செய்து வருவதால் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளின் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

click me!