ஈ-ரெசிடென்சி என்றால் என்ன? முகேஷ் அம்பானி உள்பட 2,000 இந்தியர்களைக் கவர்ந்த எஸ்தோனியா!

ரிலையன்ஸ் நிறுவன தொழிலபதிபரும் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி, எஸ்தோனியாவின் புதிய ஈ ரெசிடெண்டாக மாறியிருக்கிறார். ஈ-ரெசிடென்சி என்றால் என்ன? அதன் நன்மைகள் என்ன? அது 2000 க்கும் மேற்பட்ட இந்தியர்களை கவர என்ன காரணம் என்று தெரிந்துகொள்ளலாம்.

What is e-Residency of Estonia? Including Mukesh Ambani over 2,000 Indians are now e-Residents sgb
Mukesh Ambani and e-Residency of Estonia

முகேஷ் அம்பானியின் டிஜிட்டல் குடியுரிமை:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி, எஸ்தோனியாவின் புதிய ஈ ரெசிடெண்டாக மாறியிருக்கிறார். அதாவது பால்டிக் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள எஸ்தோனியா நாட்டின் டிஜிட்டல் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.

சுமார் 13 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும் சிறிய ஒருநாடான எஸ்டோனியா, டிஜிட்டல் முன்னேற்றங்களுக்காக உலகளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதன் டிஜிட்டல் குடியுரிமைத் திட்டமான ஈ-ரெசிடென்சி பல நாட்டினரைக் கவர்ந்துள்ளது.

What is e-Residency of Estonia? Including Mukesh Ambani over 2,000 Indians are now e-Residents sgb
How to get e-Residency of Estonia?

ஈ-ரெசிடென்சி என்றால் என்ன?

ஈ-ரெசிடென்சி உலகளாவிய தொழிலதிபர்கள் எஸ்டோனியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) வணிகங்களை நிறுவி நிர்வகிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த டிஜிட்டல் குடியுரிமை தனிநபர்கள் நிறுவனங்களை உருவாக்குதல், வரிகளைக் கையாளுதல், ஆவணங்களில் கையொப்பமிடுதல் மற்றும் வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல் போன்ற பல சேவைகளைப் பெற அனுமதிக்கிறது. இது அனைத்தையும் உலகில் எங்கிருந்தும் ஆன்லைனில் செய்ய முடியும்.

Tap to resize


Why Mukesh Ambani became the e-Resident of Estonia?

முகேஷ் அம்பானி ஈ-ரெசிடெண்ட் ஆனது ஏன்?

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானிக்கும் எஸ்டோனியா நாட்டுக்கும் உள்ள தொடர்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சம்பந்தப்பட்டது. எஸ்டோனியாவின் வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பு, குறைந்தபட்ச அரசுக் கட்டுப்பாடுகள் மற்றும் வணிக சார்பு சூழல் ஆகியவை பல உலகளாவிய நிறுவனங்களைக் கவர்கின்றன.

அம்பானி மற்றும் பிற இந்தியத் தொழிலதிபர்கள் இதனால்தான் எஸ்தோனியாவின் ஈ-ரெசிடென்சி திட்டம் மூலம் டிஜிட்டல் குடியுரிமை பெறுகிறார்கள். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைக்கு ஒரு தனித்துவமான நுழைவுவாயிலாக விளங்குகிறது. சொந்த நாட்டில் இருந்தபடியே சர்வதேச பிசினஸ் செய்ய வழிவகை செய்கிறது.

VIPs with e-Residency of Estonia

ஈ-ரெசிடெண்டான பிரபலங்கள் யார் யார்?

இந்த விஷயத்தில் அம்பானி மட்டும் இல்லை. முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூட எஸ்தோனியாவின் டிஜிட்டல் குடியுரிமை பெற்றுள்ளார். பில் கேட்ஸ், போப் பிரான்சிஸ் போன்ற பிற செல்வாக்கு மிக்க பிரமுகர்களும் எஸ்தோனியாவின் ஈ-ரெசிடெண்டுகளாக உள்ளனர்.

Indians acquiring e-Residency of Estonia

2000 க்கு மேற்பட்ட இந்தியர்கள்!

2,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இப்போது ஈ-ரெசிடெண்டுகளாக உள்ளனர். சுமார் 275 இந்தியர்களின் நிறுவனங்கள் எஸ்டோனியாவில் இருந்து செயல்படுகின்றன. இது, இந்தியாவில் தொழில்நுட்பத்துறையில் செயல்படும் தொழிலதிபர்கள் ஐரோப்பிய சந்தைகளில் நுழைய விரும்புகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

Estonia e-Residency benefits

டிஜிட்டல் குடியுரிமை:

எஸ்தோனியாவின் ஈ-ரெசிடென்சி டிஜிட்டல் குடியுரிமை திட்டம் இந்திய தொழில்முனைவோருக்கு ஒரு கேம்-சேஞ்சராக மாறியுள்ளது. உலகளவில் தங்கள் வணிகங்களை விரிவுபடுத்த டிஜிட்டல் வாய்ப்புகளை வழங்குகிறது. டிஜிட்டல் முன்னேற்றங்களில் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். எஸ்தோனியாவின் இந்தத் திட்டம் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் ஊக்குவிப்பதாக உள்ளது.

Latest Videos

click me!