விண்வெளியில் ஒரு சிம்பொனி! 2025 புத்தாண்டில் மிக அரிய வானியல் நிகழ்வு!

First Published | Dec 9, 2024, 8:02 PM IST

2025 புத்தாண்டில் வானில் பல கிரகங்கள் அருகருகே நிற்கும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 25ஆம் தேதி இரவு வானத்தில் இந்த அபூர்வமான நிகழ்வைக் காணலாம்.

Celestial Symphony 2025

2025 புத்தாண்டில் வானில் பல கிரகங்கள் அருகருகே நிற்கும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 25ஆம் தேதி இரவு வானத்தில் இந்த அபூர்வமான நிகழ்வைக் காணலாம். சூரியக் குடும்பத்தின் பல கோள்கள் நேர்த்தியான வரிசையில் இணைவது போல் தோன்றும் இந்த அமைப்பு விண்வெளியில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்.

What is Celestial Symphony?

இந்த அபூர்வ நிகழ்வில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் வானத்தின் ஒரே பகுதியில் ஒன்றாகத் தெரியும். ஆனால், ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்காது. இந்த அமைப்பு விண்வெளியில் கோள்கள் நடனமாடுவது போன்ற அழகிய மாயத்தோற்றதை உருவாக்கும்.

Tap to resize

Celestial Symphony on January 25, 2025

இது போன்ற வரிசையில் பல கோள்கள் ஒன்றிணைவது அரிதான நிகழ்வாகும். ஜோதிட ரீதியாகவும் இந்த வானியல் நிகழ்வு முக்கிய மாற்றங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Celestial Symphony Planetary Alignment

ஜோதிடம் இத்தகைய அபூர்வமான அமைப்பில் கோள்கள் வருவதை கிரகங்களின் ஆற்றல் பெருக்கமாகக் கருதுகிறது. தகவல்தொடர்பு கிரகமான புதன் ஆழமான உரையாடல்களைத் தூண்டலாம். பிரகாசமான வெள்ளி அன்பையும் அழகையும் குறிக்கிறது. செவ்வாய் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் குறிப்பது. வியாழன் ஞானத்தைத் தருகிறது. சனி ஒழுக்கத்தைத் தருவது.

January 2025 Planetary Alignment

விஞ்ஞான ரீதியாக, கிரகங்களின் வெவ்வேறு சுற்றுப்பாதை காலங்கள் காரணமாக இதுபோன்ற அமைப்புகள் ஏற்படுகின்றன. பூமியில் இந்த நிகழ்வுகளை எப்போதாவதுதான் காண முடியும். 2025 ஜனவரி மாதம் நிகழும் கோள்களின் சீரமைவு சிறப்பு வாய்ந்தது. இதை பூமியிலிருந்து வெறும் கண்களாலேயே பார்க்கலாம். தொலைநோக்கி மூலம் பார்த்தால் இன்னும் நன்றாகத் தெரியும்.

Planets glowing like jewels

அந்தி வானம் அணியும் நகை:

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இந்த அரிய வானியல் நிகழ்வைப் பார்பார்க்கலாம். அந்தி வானத்தில் கோள்கள் வானத்துக்கு நகைகள் அணிவித்தது போலத் தோன்றும். வெள்ளியும், வியாழனும் மிகவும் பிரகாசமாகத் தெரியும். செவ்வாய் கிரகம் தனித்துவமான சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கும். ஜனவரி 25ஆம் தேதி நடக்கும் இந்த அரிய நிகழ்வு வானியல் ஆர்வலர்கள் தவறவிடக்கூடாதது என்பதில் சந்தேகமே இல்லை.

Latest Videos

click me!