TikTok App
'டிக் டாக்' செயலி
இன்ஸ்டாகிராம் வருவதற்கு முன்பு உலக அளவில் 'டிக் டாக்' செயலி ரீல்ஸ் வீடியோக்களுக்கு பிரபலமாக இருந்து வந்தது. சீனாவைச் சேர்ந்த 'பைட்டான்ஸ்' என்ற நிறுவனத்துக்கு சொந்தமான 'டிக் டாக்' செயலியை இளைய தலைமுறையினர் உள்பட பல ஆயிரம் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால் 'டிக் டாக்' செயலியில் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு சந்தேகம் எழுந்ததால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் டிக்டாக்கை தடை செய்தன. இந்த பட்டியலில் இப்போது அமெரிக்காவும் இணைந்துள்ளது.
Tik Tok ban
அமெரிக்காவில் தடை
அமெரிக்காவில் சுமார் 17 கோடி பேர் டிக்டாக் பயன்படுத்தி வந்த நிலையில், டிக் டாக் நிறுவனம் இந்த செயலியில் பதிவாகும் தகவல்களையும், அமெரிக்காவின் ராணுவம் உள்ளிட்ட ரகசியங்களையும் சீன அரசுடன் பகிர்ந்து கொள்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. டிக்டாக்கை எதாவது ஒரு அமெரிக்கா நிறுவனத்துக்கு விற்க வேண்டும் அல்லது தடை விதிக்கப்படும் எனவும் அமெரிக்க எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதை பைட்டான்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அமெரிக்க அரசு இன்று முதல் டிக்டாக்குக்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக் டாக் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மட்டுமில்ல ஏராளமான நாடுகள் பாதுகாப்பு காரணங்களை காட்டி டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளன. எந்தெந்த நாடுகள் டிக் டாக்குக்கு தடை விதித்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
நடுத்த மக்களும் இனி ஐபோன் வாங்கலாம்; போட்டி போட்டு விலையை குறைத்த அமேசான், ப்ளிப்கார்ட்!
Tik Tok ban in India
இந்தியா
டிக் டாக் செயலியை முழுமையாக சட்டவிரோதமாக்கிய முதல் நாடு இந்தியா தான். கிழக்கு லடாக்கில் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்ததால் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் சீன நிறுவனங்களுக்கு சொந்தமான 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதில் டிக் டாக்கும் ஒன்றாகும். ''இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் டிக் டாக் செயலி உள்ளது'' என்று இந்தியா கூறியது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், தார்மீகச் சிதைவுக்கு ஒரு காரணம் என்று கூறி டிக் டாக் செயலியை அதிரடியாக தடை செய்து, அதை பயனடுத்துவது சட்டவிரோதம் என்று அறிவித்தனர். டிக் டாக் சமூகத்தின் தார்மீக அடித்தளத்தை அச்சுறுத்துவதாகவும், இஸ்லாமியக் கொள்கைகளுக்கு நேர் எதிராக இருப்பதாகவும் தலிபான்கள் தெரிவித்தனர்.
Which countries banned TikTok?
ஈரான், ஜோர்டான்
ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தான் நாடு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்தது. இதேபோல் வட கொரியா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளும் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளன.
Tik Tok China
சீனாவில் டிக் டாக் இருக்கிறதா?
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டிக் டாக் செயலியின் தாயகமான சீனாவில் டிக் டாக் பயன்படுத்தப்படுவதில்லை என்பது தான். சீனாவில் டிக் டாக்குக்கு பதிலாக டூயின் என்ற ஒரு ரீல்ஸ் செயலியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2016ம் ஆண்டு சீனாவில் அறிமுகமான டூயின், அங்கு டிக் டாக் போன்று ரீல்ஸ் வீடியோக்களுக்கு பிரபலமானது. ஆனால் டிக் டாக் செயலியை உருவாக்கிய 'பைட்டான்ஸ்' நிறுவனம் தான் டூயின் செயலியையும் உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்புக்கு முன்பு டிரம்ப் போட்ட டூர் பிளான்; இந்தியா & சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா! ஏன்?