இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த இராணுவ மோதலின்போது ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், வீழ்த்தப்பட்டவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த இராணுவ மோதலின்போது ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். ஆனால், வீழ்த்தப்பட்டவை எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
அணு ஆயுத வல்லமை கொண்ட இரு அண்டை நாடுகளுக்கு இடையே வர இருந்த போரை தனது நிர்வாகம் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் ஒருமுறை வலியுறுத்திப் பேசிய டொனால்டு டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டார். எனினும், ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறுவதற்கு எந்த அதிகாரப்பூர்வ ஆதாரமும் இதுவரை இல்லை.
25
வீழ்த்தப்பட்ட ஐந்து விமானங்கள்
வெள்ளை மாளிகையில்யில் குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் நடைபெற்ற இரவு விருந்தில் டொனால்டு டிரம்ப் பேசுகையில், "நாங்கள் பல போர்களை நிறுத்தியுள்ளோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்தவை மிகவும் தீவிரமானவை. விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையில், ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று நான் நினைக்கிறேன். இவை இரண்டு அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகள், அவை ஒன்றுக்கொன்று தாக்கிக்கொண்டிருந்தன. இது ஒரு புதிய வகையான போர் போல தெரிகிறது" என்று கூறினார்.
மே 10ஆம் தேதி சமூக ஊடகங்களில் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தத்திவிட்டதாக டிரம்ப் அறிவித்தார். தான் இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போர் நிறுத்தப்பட்டதாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். தான் தலையிட்டு இரு நாடுகளுடனும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை துண்டிப்பதாக எச்சரித்ததை அடுத்து போர்நிறுத்தம் ஏற்பட்டது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஆனால், டிரம்ப்பின் இந்தக் கூற்றுகளை இந்தியா மறுத்துள்ளது.
35
அணு ஆயுத நாடுகள்
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளை நேரடியாகவும் வெளி தலையீடு இல்லாமலும் தீர்க்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தம் ஏற்பட வர்த்தக ஒப்பந்தமே காரணம் என்றும் டிரம்ப் மீண்டும் கூறினார். “இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டிருந்தன, அது மேலும் மேலும் பெரிதாகி வந்தது, அதை வர்த்தகத்தின் மூலம் தீர்த்து வைத்தோம். நீங்கள் வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்பினால், ஆயுதங்களைக் கைவிடுங்கள். ஒருவேளை நீங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால் நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று கூறினோம். இரு நாடுகளும் மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுத நாடுகள்தான்" என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
சமீபத்திய இஸ்ரேல்-ஈரான் போரையும் டொனால்டு டிரம்ப் சுட்டிக்காட்டினார். "ஈரானில் என்ன செய்ததோம் என்பதை சமீபத்தில் பார்த்திருப்பீர்கள். அங்கு அவர்களின் அணுசக்தி திறனை முற்றிலும் அழித்தோம்..." என்று டிரம்ப் கூறினார்.
55
ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் நிலைப்பாடு
கடந்த மாதம் காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) என்ற பெயரில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள பயங்கரவாத நிலைகளை இந்தியா தாக்கியது. இதன் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே தீவிர மோதல் மூண்டது. இரு தரப்பும் டிரோன்கள், ஏவுகணைகள் மற்றும் பிற நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தினர். இது முழு அளவிலான போர் குறித்த அச்சத்தை எழுப்பியது.
மே 10 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் ஜெனரல்கள் (DGMOs) இடையே நடந்த தொலைபேசி அழைப்பின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது என்று இந்தியா கூறிவருகிறது.