Published : Apr 17, 2025, 11:04 AM ISTUpdated : Apr 17, 2025, 11:31 AM IST
சீனாவுடனான வர்த்தகப் போர் விளக்கத்தை எலான் மஸ்க்கிற்கு தனியாக அளிக்க டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மஸ்கின் சீன வர்த்தக தொடர்புகள் காரணமாக டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். இது இருவருக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவுடனான வர்த்தகப் போர்த் திட்டங்கள் குறித்து பென்டகனில் எலான் மஸ்க்கிற்கு தனியாக ரகசிய விளக்கம் அளிப்பதை அறிந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். அந்த ரகசியக் கூட்டத்தையும் டிரம்ப் தானே தலையிட்டு ரத்து செய்துள்ளார்.
24
Donald Trump and Elon Musk
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் சீனாவில் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள வணிகத்தைக் கொண்டிருப்பதால் அவருக்கு மட்டும் தனியாக விளக்கம் அளிப்பது குறித்து டிரம்ப் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.
34
DOGE chief Elon Musk
அமெரிக்க அரசின் செலவினக் குறைப்புத் துறையான DOGE தஇன் தலைவராக உள்ள எலான் மஸ்க், முரண்பாடு ஏற்படும் விதமாக எந்தவிதமான செயலிலும் ஈடுபடாமல் இருக்க டிரம்பிற்கு உறுதிமொழி அளித்திருந்த நிலையில், இந்த நகர்வு டிரம்ப் - மஸ்க் இடையேயான உறவில் புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
44
US China Trade War
அதிபர் டிரம்ப் இன்னும் எலான் மஸ்க் உடன் மிகவும் சுமூகமான உறவில் இருந்தாலும், மஸ்கின் நடவடிக்கைகள் குறித்து தனியாக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் என பென்டகன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "எலான் மஸ்கிற்கு சீனாவில் நிறைய தொழில்கள் உள்ளன, அவருக்கு அங்கு நல்ல உறவுகள் உள்ளன. இந்த நிலையில், அவருக்கு ரகசிய விளக்கமளிப்பது சரியான விஷயம் அல்ல" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.