100 நாட்களில் உலகம் முழுவதும் சுற்றிவரும் ரயில்!

Published : Apr 15, 2025, 09:59 AM ISTUpdated : Apr 15, 2025, 11:49 AM IST

விமானமின்றி ரயிலில் உலகைச் சுற்றி வரலாம்! அட்வென்ச்சர்ஸ் பை ரயில் நிறுவனத்தின் ப்ளூ ரயில் சேவை மூலம் 100 நாட்களில் 14 நாடுகளைக் கடக்கலாம். இதற்கான கட்டணம் ஒரு கோடி ரூபாய்.

PREV
14
100 நாட்களில் உலகம் முழுவதும் சுற்றிவரும் ரயில்!
Around the World in 100 Days by Train

உலகத்தைச் சுற்றும் ப்ளூ ரயில்:

நீங்கள் உலகையே சுற்றி வர வேண்டும் என்று கனவு காண்பவரா? விமானத்தில் ஏறாமலேயே ரயில் மூலமாகவே பூமியை முழுமையாகச் சுற்றிவர முடியும். இந்த ரயிலில் பயணம் செய்வதற்கஆன கட்டணம் £100,000. இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய்!

சுற்றுலா ஏற்பாட்டாளரான அட்வென்ச்சர்ஸ் பை ரயில், ப்ளூ ரயில் என்ற சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 100 நாட்களில் ரயிலில் உலகம் முழுவதையும் சுற்றலாம். இந்த ரயில் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா வழியாக உலகைச் சுற்றிவரும். 12 பயணிகள் வரை மட்டுமே இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும். முழு பயணமும் ரயில் மற்றும் படகு மூலமாகவே இருக்கும். ஒருமுறைகூட விமானமும் ஏறத் தேவையில்லை.

24
Around the World in 100 Days by Train

100 நாள் பயணம்:

லண்டனில் இருந்து 2026 மார்ச் 17ஆம் தேதி புறப்படும் இந்த 100 நாள் பயணத்திட்டத்தில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், சீனா, ஜப்பான், கனடா மற்றும் அமெரிக்கா உட்பட 14 நாடுகள் அடங்கும். பயணிகள் ஜப்பானின் ஷிங்கன்சென் புல்லட் ரயில் போன்ற புகழ்பெற்ற ரயில் சேவைகளில் பயணிக்கலாம். இஸ்தான்புல் வழியாகச் செல்லும் ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் பயணம் செய்யலாம்.

உலகைச் சுற்றும் சாகசப் பயணத்திற்காக ஒரு நபருக்கு £112,900 கட்டணம் பெறப்படும். தங்குமிட வசதியை இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டால் ஒரு நபருக்கு £89,950 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தில் அனைத்து போக்குவரத்து செலவுகளும் அடங்கும். 5 ஸ்டார் ஹோட்டல் தரத்தில் தங்குமிடமும் சுவையான உணவுவும் வழங்கப்படும். முழுநேர சுற்றுலா வழிகாட்டியும் எப்போதும் உடன் இருப்பார்.

34
Around the World in 100 Days by Train

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள்:

இந்தப் பயணம் உலகத்தரம் வாய்ந்த ரயில் பயண அனுபவங்களை வழங்கும். இந்தப் பயணத்தில் ஜப்பானில் பாரம்பரிய தேநீர் விழாக்கள், துருக்கிய பளிங்கு வேலைப்பாட்டு பட்டறைகள், நியூயார்க்கின் மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வியன்னாவில் ஒரு கிளாசிக்கல் இசை நிகழ்ச்சி போன்றவை இடம்பெறும். நியூயார்க், ஷாங்காய், வியன்னா போன்ற நகரங்களில் இஸ்தான்புல்லில் உள்ள ஹகியா சோபியா, சியான் நகரில் உள்ள டெரகோட்டா வீரர்களின் சிற்பங்கள் முதலிய பல யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற சுற்றுலாத் தலங்களைக் காணலாம்.

தங்குமிடத்தில் ஆடம்பரத்திற்கு குறைவே இருக்காது. பயணிகள் இஸ்தான்புல்லில் உள்ள பெரா பேலஸ், ஷாங்காயில் உள்ள தி ஃபேர்மவுண்ட் பீஸ் ஹோட்டல், நியூயார்க்கில் ஐந்தாவது அவென்யூவில் உள்ள தி லாங்ஹாம் போன்ற பிரபல ஸ்டார் ஹோட்டல்களில் தங்குவைக்கப்படுவார்கள்.

44
Around the World in 100 Days by Train

சொகுசு கப்பல் பயணங்கள்:

இந்த பயணத்திட்டத்தில் இரண்டு சொகுசு கப்பல் பயணங்களும் அடங்கும். டோக்கியோவிலிருந்து வான்கூவர் வரை வைக்கிங் வீனஸில் 23 நாள் பயணம் செய்யலாம். நியூயார்க் நகரத்திலிருந்து சவுத்தாம்ப்டன் வரை குயின் மேரி 2 இல் ஏழு நாட்கள் அட்லாண்டிக் கடல்வழிப் பயணம் செய்யலாம். இந்தக் கப்பல்களிலும் தனி அறைகளுடன் சகல வசதிகளும் கிடைக்கும். அஜர்பைஜானிலிருந்து கஜகஸ்தானுக்கும், ஷாங்காயிலிருந்து ஒசாகாவுக்கும் இரவு நேர படகுப் பயணம் மேற்கொள்ளலாம்.

“இந்த சுற்றுப்பயணம் பல வருட திட்டமிடல் கவனமாக செம்மைப்படுத்தப்பட்டது ஆகும். பயணிங்களுக்கு உலகின் சிறந்த ரயில் பயண அனுபவத்துடன் பல நாடுகளின் சிறப்புமிக்க கலாச்சார அனுபவங்களும் கிடைக்கும்” என்கிறார் அட்வென்ச்சர்ஸ் பை ரயிலின் இயக்குனர் ஜிம் லூத்.

Read more Photos on
click me!

Recommended Stories