வெளிநாட்டில் எடுக்கும் படங்களுக்கு 100% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!

Published : Sep 29, 2025, 08:30 PM IST

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மீது 100% வரி விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதேபோன்ற வரி வெளிநாட்டு தளவாடப் பொருட்கள் மீதும் விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

PREV
14
டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மீது 100% வரி விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (திங்கட்கிழமை) அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் திரைப்படத் தயாரிப்புத் தொழிலைக் காக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

24
டிரம்ப் குற்றச்சாட்டு

ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக ஊடக தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், மற்ற நாடுகள் அமெரிக்காவின் திரைப்படத் தயாரிப்புத் தொழிலைத் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

"நமது திரைப்படத் தயாரிப்புத் தொழில் மற்ற நாடுகளால் அமெரிக்காவிடமிருந்து திருடப்பட்டுள்ளது. இது 'குழந்தையிடம் இருந்து சாக்லெட்டுகளைத் திருடுவது' போன்றது. கலிபோர்னியா அதன் பலவீனமான மற்றும் திறமையற்ற ஆளுநரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது! எனவே, இந்த நீண்டகால, முடிவில்லாத பிரச்சனைக்குத் தீர்வு காண, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்கள் மீதும் நான் 100% வரி விதிப்பேன்" என்று டிரம்ப் ஆவேசமாகத் தெரிவித்தார்.

34
ஹாலிவுட் நெருக்கடி

ஹாலிவுட்டின் மையமாகக் கருதப்படும் லாஸ் ஏஞ்சல்ஸில், கடந்த பத்தாண்டுகளில் திரைப்படத் தயாரிப்பு சுமார் 40% குறைந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், $40 மில்லியனுக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் அமெரிக்கப் படங்களின் தயாரிப்புச் செலவில் கிட்டத்தட்ட பாதி வெளிநாடுகளுக்குச் செல்வதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்தச் சூழலில்தான் ஜனவரியில், ஹாலிவுட் துறையை மீட்டெடுக்கவும், முன்பை விடப் பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையானதாகவும் மாற்றவும், ஹாலிவுட் பிரபலங்களான ஜான் வாய்ட், சில்வெஸ்டர் ஸ்டாலோன் மற்றும் மெல் கிப்சன் ஆகியோரின் உதவியை டிரம்ப் நாடினார்.

44
தளவாடப் பொருட்களுக்கும் வரி

திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்காவில் தயாரிக்கப்படாத தளவாடப் பொருட்கள் (Furniture) மீதும் கணிசமான வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்தார். சீனா மற்றும் பிற நாடுகளிடம் வட கரோலினா தனது தளவாடத் தொழிலை இழந்ததாகக் குறிப்பிட்டு, அந்த மாநிலத்தை மீண்டும் சிறந்ததாக மாற்றும் நோக்கத்துடன் இந்த வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories