பலூசிஸ்தானின் மீதான பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாடு படிப்படியாகக் குறைந்து வருகிறது. பாகிஸ்தான் அரசு இனி பலூசிஸ்தானின் பல பகுதிகளைக் கட்டுப்படுத்த முடியாது. பலூச் கிளர்ச்சியாளர்கள் அப்பகுதிகளை தங்கள் சொந்தமாக நடத்துகிறார்கள்.
ஷாபாஸ் ஷெரீப்பும் அவரது பீல்ட் மார்ஷல் அசிம் முனீரும் டொனால்ட் டிரம்பைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தானுக்கு 440 வோல்ட் ஷாக் கொடுத்துள்ளனர். நேற்று, பலூச்சிஸ்தானின் இரண்டு கனிம வளம் மிக்க மாவட்டங்களான சூரப், கலாட்டை பலூச் பாதுகாப்பு படைகள் முழுமையாகக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
தகவல்களின்படி, பலூச் தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடிகளை நிறுவி, ஆயுதங்கள் மற்றும் பொருட்களுடன் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வாகனங்களையும் கைப்பற்றினர். பலூசிஸ்தானின் அரிய கனிமங்களை பிரித்தெடுப்பது குறித்து விவாதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தலைவர் அசிம் முனீர் ஆகியோரைச் சந்தித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. பாகிஸ்தானுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாத கனிம வளங்கள் வழங்குவது குறித்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
24
வலுவிழக்கும் பாகிஸ்தான் அரசு
பலூசிஸ்தானின் மீதான பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாடு படிப்படியாகக் குறைந்து வருகிறது. பாகிஸ்தான் அரசு இனி பலூசிஸ்தானின் பல பகுதிகளைக் கட்டுப்படுத்த முடியாது. பலூச் கிளர்ச்சியாளர்கள் அப்பகுதிகளை தங்கள் சொந்தமாக நடத்துகிறார்கள். பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி பலூச் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். பலூச் விடுதலை இராணுவம் பாகிஸ்தான் இராணுவத்துடன் தொடர்ந்து போராடி வருகிறது.
பலூச் தலைவர் மிர் யார் பலூச் சமூக ஊடக எக்ஸ்தளப்பதிவில் "நேற்று இரவு, பலூச் பாதுகாப்பு பிரிவுகள் சூரப், கலாட் ஆகிய இரண்டு முக்கியமான மாவட்டங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளன. ஆக்கிரமிப்புப் படைகளான பாகிஸ்தான் இராணுவம் சொந்தமான இரண்டு வாகனங்கள் ஆயுதங்கள், பொருட்களுடன் கைப்பற்றப்பட்டன. பலூச் இயக்கம் வலுவடைந்து வருவதற்கும், ஆக்கிரமிப்புப் படைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன என்பதற்கும் இது மேலும் சான்று’’ எனத் தெரிவித்துள்ளார்.
34
டிரம்பிற்கு ஒரு அனுதாபமான அறிவுரை
மிர் யார் பலூச் டொனால்ட் டிரம்பிற்கு ஒரு செய்தியையும் அனுப்பியுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், "டிரம்பிற்கு ஒரு அனுதாபமான அறிவுரை என்னவென்றால், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புப் படைகளுடன் அல்ல, இந்தப் பகுதியின் உண்மையான உரிமையாளர்களுடன் நேரடியாகப் பேசுவதாகும். பரஸ்பர மரியாதை, நீண்டகால கூட்டாண்மை, பிராந்தியத்திற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி இதுதான். வஞ்சகமான, பயங்கரவாத இராணுவத்துடன் கூடிய பாகிஸ்தான், அதன் தொடக்கத்தில் இருந்தே உலகிற்கு ஏமாற்றத்தைத் தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. இந்த உண்மையை அமெரிக்க இராணுவத் தலைவர்கள், அரசியல்வாதிகள், டிரம்புக்கும் கூட மீண்டும் மீண்டும் எடுத்துரைத்து உள்ளனர்.
பாகிஸ்தான் கடந்த காலங்களில் எப்போதும் அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் அதையே தொடரும். அமெரிக்காவை இருட்டில் வைத்திருப்பதன் மூலம், அது பஞ்சாப், இஸ்லாமாபாத்தின் நலன்களுக்கு மட்டுமே உதவும். அமெரிக்காவின் நலனுக்கு அல்ல. பலூசிஸ்தானின் கனிம வளத்துடன் ஒப்பந்தங்களை பரிசீலிக்கும் அரசாங்கங்களும், நிறுவனங்களும் பலூச் மக்களின் சுதந்திரமான, தகவலறிந்த ஒப்புதல் இல்லாமல் நமது வளங்களை சுரண்டுவதற்கான எந்தவொரு முயற்சியும் சட்டவிரோதமானது என்று அறிவுறுத்தப்படுகிறது." என்று மிர் யார் பலூச் எச்சரித்துள்ளார்.