கொட்டி கிடக்கும் தக்காளி.! ஒரு கிலோ இவ்வளவு தானா.? அள்ளிச்செல்லும் மக்கள்

Published : Jul 14, 2025, 08:01 AM ISTUpdated : Jul 14, 2025, 08:40 AM IST

சமீபத்தில் அதிகரித்த தக்காளி விலை மீண்டும் குறைந்து, கோயம்பேடு சந்தையில் 100 ரூபாய்க்கு 4-5 கிலோ விற்பனையாகிறது. வெங்காயம் விலையும் குறைந்துள்ள நிலையில், பிற காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது.

PREV
15
சமையலும் காய்கறிகளும்

சமையல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காய்கறிகள் தான், ஏனெனில் அவை சத்துக்கள் நிறைந்தவை மற்றும் பலவகையான உணவுகளை சுவையாக்க உதவுகின்றன. சமையலில், காய்கறிகள் கறி, கூட்டு, பொரியல், சாம்பார், சாலட், மற்றும் பல உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 

காய்கறிகள் வைட்டமின்கள் (A, C, K) நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குவதால் இவை உடல்நலத்தை மேம்படுத்த பெரிதும் பயன்படுகிறது. எனவே காய்கறி சந்தையில் மூட்டை மூட்டையாக சரக்குகள் வந்தாலும் ஒரே நாளில் காலியாகிவிடும். அந்தளவிற்கு காய்கறிகளை மக்கள் வாங்கி செல்வார்கள்.

25
திடீரென உயர்ந்த தக்காளி, வெங்காயம் விலை

பச்சை காய்கறிகளை மக்கள் அதிகளவு வாங்கி சென்றாலும் தக்காளி, வெங்காயம் சமையலில் முக்கிய இடம் பிடிக்கிறது. ரசம் முதல் பிரியாணி வரை எந்த சமையலாக இருந்தாலும் தக்காளி, வெங்காயம் அத்தியாவசியமாகும். எனவே தக்காளி, வெங்காயத்தின் வரத்தை குறைந்தால் இல்லத்தரசிகளின் நிலைமை அதோ கதிதான். 

அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி மற்றும் வெங்காயம் போட்டி போட்டு விலை உயர்ந்தது. ஒரு கிலோ 100 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் கூடை கூடையாக வாங்கி சென்ற மக்கள் கை நிறைய கூட வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே விலை எப்போது குறையும் என மக்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு குட் நியூஸ் சொல்லும் வகையில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் வரத்தும் அதிகரித்தது.

35
தக்காளி விலை என்ன.?

இதனால் தக்காளி ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல வெங்காயத்தின் விலையும் குறைய தொடங்கியது. நாசிக்கில் இருந்து அதிகப்படியான வெங்காய வரத்தால் ஒரு கிலோ வெங்காயம் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே தக்காளி விலையானது கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உயர தொடங்கியது. 

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாயை தொட்டது. வெளி மார்க்கெட்டில் 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. இந்த விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தக்காளி விலை மீண்டும் குறைந்து வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு சந்தையில் 100 ரூபாய்க்கு 4 முதல் 5 கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

45
அதிகரித்த பச்சை காய்கறிகள் விலை

அதே நேரம் பச்சை காய்கறிகளின் விலையானது சற்று அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,

 பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55
இன்றைய காய்கறிகள் விலை என்ன.?

முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், 

முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி செந்திலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Read more Photos on
click me!

Recommended Stories