உலகம் முழுவதும் விதவிதமான வினோத செயல்களில் ஈடுபட்டு சாதனை படைப்பதில் பலரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள். அவ்வாறு புதிது புதிதாக சாதனை புரிபவர்கள் உலக சாதனைப் புத்தகங்களில் தங்களை பெயரையும் சேர்த்துவிடுகின்றனர்.
அந்த வகையில் பெர்லா டிஜெரினாவும் வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். 31 வயதான பெர்லா டிஜெரினா என்ற இளம்பெண் வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நாட்டில் உள்ள சால்டிலோ நகரைச் சேர்ந்தவர்.
இவர் எரிமலையின் மேல் ஒரு மாத காலம் தங்கி சாதனை படைக்க முயற்சியில் இறங்கினார். சரியாக 32 நாட்களை அங்கு கழிக்க திட்டமிட்டுள்ளார் பெர்லா டிஜெரினா.
வட அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் மிக உயரமான மலையாகக் கருதப்படும் பிகோ டி ஒரிசாபாவின் உச்சியில் வசித்து வருகிறார். பனியால் போர்த்தப்பட்டிருக்கும் இந்த எரிமலையில் கடல் மட்டத்திலிருந்து 18,491 அடி உயரத்தில் தான் தற்போது பெர்லா தங்கி இருக்கிறார்.
மார்ச் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை தங்க மலை உச்சியில் தங்கத் திட்டமிட்டிருக்கிறார் பெர்லா டிஜெரினா. மலை உச்சியில் தனது அனுபவத்தை ஆவணப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல பதிவுகளைப் வெளியிட்டு வருகிறார்.