ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி ''சர்வதேச மகிழ்ச்சி நாள்'' கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐநாவின் நீடித்த வளர்ச்சிக்கான தீர்வுகளை அமைப்பு வெளியிட்டது. தொடர்ச்சியாக 11வது ஆண்டாக இந்த மகிழ்ச்சிய நிறைந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளின் சராசரி தரவுகளின் ஆடிப்படையில் 150 நாடுகளில் தரவுகள் எடுக்கப்பட்டு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, மக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP), ஆயுட்காலம், வாழ்க்கை சுதந்திரம், சமூக ஆதரவு, குற்றவியல நடவடிக்கைகள், ஊழல் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இந்தியா..!
137 நாடுகள் கொண்ட ஆசிய நாடுகளில் இந்தியா 126வது இடத்தை பிடித்துள்ளது. அண்மை நாடுகளான நேபாளம் 78வது இடத்தையும், சீனா 64வது இடத்தையும், வங்கதேசம் 117வது இடத்தையும், இலங்கை 112வது இடத்தையும் பிடித்துள்ளன. தாலிபன்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் 137வது இடத்தை பிடித்துள்ளது. இதுவே கடைசி இடம் மற்றும் மகிழ்ச்சியில்லாத நாடு என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.