ஒரே ஒரு வழக்கு! ஜெர்மனியில் பெண்களுக்கு கிடைத்த நிர்வான சுதந்திரம்!

First Published | Mar 11, 2023, 4:46 PM IST

ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களுக்குச் செல்ல அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 

ஜெர்மனியின் பெர்லின் நகரின் திறந்தவெளி நீச்சல் குளம் ஒன்றில் பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்த நிலையில், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்த பெண், மேலாடையின்றி குளிக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது பாரபட்சமானது எனக் கூறி ஜெர்மன் சென்ட் சபையின் குறை தீர்க்கும் பிரிவில் புகாரளித்தார்.
 

இதன் விளைவாக, பெர்லின் நகராட்சி பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதியளித்துள்ளது. ஜெர்மனியின் சிஜென், காட்டின்ஜென் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இத்தகைய நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெர்மனி நகராட்சிகளின் இந்த தீர்ப்பினை ''Freikörperkultur'' என்று அழைக்கப்படும் “சுதந்திர உடல் கலாச்சார” சங்கமம் வரவேற்றுள்ளது.

Latest Videos


கடற்கரைகளில் மேலாடையின்றி பெண்கள் குளிக்கவும், சூரிய குளியல் எடுக்கவும் உலக அளவில் 39 நாடுகளில், அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுமார் 38 நாடுகளில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 29 நாடுகளில் இது குறித்த தெளிவான விதிமுறைகள் எதுவும் இல்லை. அமெரிக்காவில் 32 மாகாணங்களில், பெண்கள் மேலாடையின்றி குளிக்கவும், சூரிய குளியல் எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
 

ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து, பிரிட்டன், ஜப்பான், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளில் நிர்வான குளியல் சுதந்திரத்திற்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், ஹங்கேரி போன்ற ஒரு சில நாடுகளில், முழு நிர்வாண குளியலுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொது நிர்வாணத்தை பொருத்தமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் கருதும் நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!