Turkey Syria Earthquakes: நெஞ்சை பதற வைக்கும் துருக்கி, சிரியா நிலநடுக்கக் காட்சிகள்

First Published | Feb 8, 2023, 3:14 PM IST

அதிபயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 8 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

அதிபயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் 8 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். கொட்டும் பனியிலும் மீட்புப் படையினர் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற பாடுபட்டு வருகிறார்கள்.

சிரியா நாட்டில் நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் தன் தம்பியை அரவணைத்து இருக்கும் 7 வயது சிறுமி.

Tap to resize

துருக்கியில் நிலநடுக்கத்தில் இறந்தபோது தனது 15 வயது மகளின் கையைப் பிடித்தபடி மீட்கப்பட காத்திருக்கும் தந்தை.

துருக்கியில் தன்னை வளர்த்தவர் நிலநடுக்க இடுபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டிருப்பதைக் கண்டு குரல் கொடுக்கும் நாய்

நிலநடுக்கத்தில் தன் குடும்பத்தினரை இழந்து தவிக்கும் சிறுவன் தனிமையில் அமர்ந்து கண்ணீர் சிந்தும் சோகக் காட்சி.

சிரியாவில் நிலநடுக்கதால் இடிந்து விழுந்த மருத்துவமனை கட்டிட இடுபாடுகளில் இருந்து ஒரு பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

துருக்கியில் பேரிடர் கால மீட்புப் படை வீரர்கள் கட்டிட இடிபாட்டுகளுக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காட்சி

துருக்கியில் தரைமட்டமான அடுக்குமாடி குடியிருப்பு இடிமாடுகளில் பல கார்கள் நசுங்கிக் கிடக்கும் காட்சி.

Latest Videos

click me!