சிஷ்யைகளால் வந்த தொந்தரவு.. கைலாசா எப்படிப்பட்ட நாடு தெரியுமா.? நித்தியானந்தா சொன்ன ப்ளாஷ்பேக்

First Published | Mar 19, 2023, 8:35 AM IST

எல்லையற்ற சேவையை சார்ந்த நாடு தான் கைலாசா என்று நித்தியானந்தா தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ஐ.நாவில் கைலாசா நாட்டை அங்கீகரித்துவிட்டனர் என்று தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல் நித்யானந்தா மீது பல்வேறு இந்து அமைப்புகள் குற்றம்சாட்டி அவரை நாட்டை விட்டு துரத்திவிட்டனர் என்று பெண் பிரதிநிதிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் நித்யானந்தாவின் யுனைடெட் ஆப் கைலாசா நாட்டை ஐ.நா அங்கீகரித்துவிட்டதா என்ற கேள்வி எழ, அது இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

இதையும் படிங்க..ஒரே டார்ச்சர்.!! மகளின் தோழியிடம் ஆபாசமாக பேசிய தந்தை.. கடைசியில் தோழி எடுத்த அதிரடி முடிவு

Latest Videos


இந்நிலையில் நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.  அதில், “நாங்கள் பண்டைய அறிவொளி பெற்ற இந்து நாகரிக தேசத்தின் மறுமலர்ச்சி மற்றும் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இருந்து செயல்படும் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட NGOகளின் குழு மூலம் செயல்படுகிறோம்.

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

எல்லையற்ற சேவை சார்ந்த தேசமான மால்டாவின் இறையாண்மை ஆணை போன்ற ஒரு நாட்டின் உணர்வில் இது மிகவும் நிறுவப்பட்டது. ஆனால் நாடு எவ்வாறு இயங்குகிறது? அதற்கு தேர்தல் இருக்கிறதா? குடிமக்களிடம் பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் உள்ளதா? "

மால்டாவின் இறையாண்மை ஆணையைப் போலவே, கைலாசா பல நிறுவனங்கள் மற்றும் பல நாடுகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கோவில்கள் மற்றும் மடாலயங்கள் மூலம் செயல்படுகிறது.

இந்தியாவில் பாலியல் பலாத்காரம் மற்றும் ஏமாற்றுதல் போன்ற பல குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா என்பது தவறான தகவல் ஆகும். அத்தகைய குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. பல முக்கிய மனித உரிமைகள் வழக்கறிஞர்கள் சுதந்திரமான அறிக்கைகளையும் சட்டக் கருத்துக்களையும் அளித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு

click me!