7 லட்சம் கோடி மதிப்புள்ள உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கம் இதுதான்! எங்குள்ளது தெரியுமா?

First Published | Nov 30, 2024, 11:44 AM IST

7 லட்சம் கோடி மதிப்புள்ள பிரம்மாண்ட தங்கச் சுரங்கம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இந்த சுரங்கம், உலகின் மிகப்பெரிய தங்க இருப்பாக கருதப்படும் தென்னாப்பிரிக்க சுரங்கத்தை விட பெரியது. 

World 's Biggest Gold Mine

தங்கம் என்பது இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே மிகவும் மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகிறது. பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுவதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். இந்த நிலையில் பூமியின் மிகப்பெரிய தங்க இருப்பு தங்களிடம் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

1,000 மெட்ரிக் டன்கள் பிரீமியம் தரமான தாது என மதிப்பிடப்பட்ட தங்க சுரங்கம் இருப்பதாக கூறப்படுகிறது..ஹுனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் கவுண்டியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் கிட்டத்தட்ட ₹7 லட்சம் கோடி (600 பில்லியன் யுவான்) மதிப்பீட்டில் தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய சுரங்க வரையறைகளை மறுவரையறை செய்ய உள்ளது.

World 's Biggest Gold Mine

சீனாவின் இந்த தங்கச்சுரங்கம், தென்னாப்பிரிக்காவில் உள்ள தென் ஆழமான சுரங்கத்தை மிஞ்சி உள்ளது. இதற்கு முன்பு 930 மெட்ரிக் டன்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தங்க இருப்பு என்று தென்னாப்பிரிக்காவின் தங்கச்சுரங்கம் கருதப்பட்டது.

ஆனால் தற்போது சீனாவின் தங்கச் சுரங்கத்தில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் 300 மெட்ரிக் டன்கள் பிரித்தெடுக்கக்கூடிய தங்கம் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஆய்வில், மேம்பட்ட 3D புவியியல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன்படி 3 கி.மீ ஆழம் வக் இன்னும் ஆழமான செல்வங்களைக் குறிக்கிறது, இது 3 கிலோமீட்டர் ஆழம் வரை தங்கம் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos


World 's Biggest Gold Mine

ஹுனானின் புவியியல் பணியகத்தின் துணைத் தலைவர் லியு யோங்ஜுன் இதுகுறித்து பேசிய போது “இந்த கண்டுபிடிப்பு சீனாவின் சுரங்கத் துறைக்கு ஒரு முக்கிய தருணம்" என்று தெரிவித்தார். மேலும் நிலத்தடி புதையல் பெட்டியை வெளிக்கொணர்ந்ததற்காக 3D மாடலிங் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பாராட்டினார்.

World 's Biggest Gold Mine

இந்த கண்டுபிடிப்பு சீனப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சீனாவின் தங்க உற்பத்தி திறன்களையும், அதன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்பப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புக்கு முன், உலகின் மிக முக்கிய தங்க சுரங்கங்கள் தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவியிருந்தன. ஆனால் தற்போது, ​​சீனாவின் பிங்ஜியாங் கவுண்டி தங்கச் சுரங்க வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தயாராக உள்ளது. இதனால் தங்கம் அதிகம் வைத்திருக்கும் நாடுகளையும் சீனா மிஞ்சிவிடும் என்றும் கூறப்படுகிறது.

World 's Biggest Gold Mine

சரி, உலகளவில் மிக முக்கியம் தங்க சுரங்களை கொண்ட நாடுகள் என்னென்ன?

சவுத் டீட் தங்கச் சுரங்கம், தென்னாப்பிரிக்கா
கிராஸ்பெர்க் தங்கச் சுரங்கம், இந்தோனேசியா
ஒலிம்பியாடா தங்கச் சுரங்கம், ரஷ்யா
லிஹிர் தங்கச் சுரங்கம், பப்புவா நியூ கினியா
Norte Abierto தங்கச் சுரங்கம், சிலி
கார்லின் ட்ரெண்ட் தங்கச் சுரங்கம், அமெரிக்கா
போடிங்டன் தங்கச் சுரங்கம், ஆஸ்திரேலியா
Mponeng தங்கச் சுரங்கம், தென்னாப்பிரிக்கா
பியூப்லோ விஜோ தங்கச் சுரங்கம், டொமினிகன் குடியரசு
கோர்டெஸ் தங்கச் சுரங்கம், அமெரிக்கா

சீனாவின் இந்த கண்டுபிடிப்பு தங்கத் தொழிலின் நிலப்பரப்பை எவ்வாறு மறுவடிவமைக்கும் என்பதை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.. பிங்ஜியாங் கவுண்டி தங்கத்தின் புதிய உலக தலைநகராக மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

click me!