Thailand Travel Rules: தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்தியர்களுக்கு செப்டம்பர் 15, 2026 முதல் முக்கியமான மாற்றம் வருகிறது. பயணத்துக்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை இந்தியர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
இந்திய பாஸ்போர்ட் வெச்சிருக்கீங்களா? தாய்லாந்துக்கு டிரிப் போக பிளான் இருந்தா, செப்டம்பர் 15, 2026 முதல் வரப்போற இந்த புது ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க. இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணம் தொடரும். ஆனா, முன்னாடி 60 நாள் வரைக்கும் தங்கலாம், இப்போ அதை 30 நாளா குறைச்சிட்டாங்க. அதனால, தாய்லாந்து கிளம்புறதுக்கு முன்னாடி சில முக்கியமான டாக்குமெண்ட்ஸ் பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப அவசியம்.
27
விசா தேவையில்லை
செப்டம்பர் 15 முதல், டூரிஸ்ட்டா தாய்லாந்து போற இந்தியர்கள் டூரிஸ்ட் விசா எடுக்கத் தேவையில்லை. ஆனா, இந்த விசா இல்லாத சலுகையில அதிகபட்சமா 30 நாள் மட்டும்தான் தங்க முடியும். முன்னாடி இந்த வசதி 60 நாள் வரைக்கும் இருந்துச்சு, இப்போ அதை பாதியா குறைச்சிருக்காங்க. அதாவது, விசா இல்லாத பயணத்தை ரத்து செய்யல, ஆனா தங்கற நாட்களை மட்டும் குறைச்சிருக்காங்க.
37
தாய்லாந்து இந்தியர்கள் விசா
தாய்லாந்துக்கு நீங்க போற தேதியிலிருந்து, உங்க பாஸ்போர்ட் குறைஞ்சது ஆறு மாசத்துக்கு செல்லுபடியாகணும். பாஸ்போர்ட் எக்ஸ்பயரி ஆகப்போகுதுன்னா, பயணம் கிளம்புறதுக்கு முன்னாடியே அதைப் புதுப்பிச்சுக்கிறது நல்லது.
விசா இல்லாத சலுகையில தாய்லாந்து போறவங்க, கண்டிப்பா கன்ஃபார்ம் செய்யப்பட்ட ரிட்டர்ன் டிக்கெட் வெச்சிருக்கணும். 'போகும்போது மட்டும் டிக்கெட் எடுத்துக்கலாம், ரிட்டர்ன் அப்புறம் பாத்துக்கலாம்'னு நினைக்காதீங்க. இமிகிரேஷன்ல கேட்டா காட்டணும். அதேமாதிரி, ஹோட்டல் புக் பண்ண ரசீது, எங்கெல்லாம் போகப் போறீங்கங்கிற டிராவல் பிளான் இதெல்லாம் கூட ரெடியா வெச்சுக்கோங்க. புக்கிங் கன்ஃபர்மேஷனை போன்ல மட்டும் இல்லாம, ஒரு பிரிண்ட் அவுட்டும் எடுத்து வெச்சுக்கிறது நல்லது.
57
எவ்வளவு பணம் வேண்டும்?
விசா இல்லாத சலுகையில போறவங்க, கையில குறைஞ்சது 20,000 தாய் பாட் பணம் வெச்சிருக்கணும். இது இந்திய ரூபாயில சுமார் 58,000 வரும். வெறும் கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பேமென்டை மட்டும் நம்பி போகாம, இந்த பணத்தை ரெடியா வெச்சுக்கோங்க. இன்னொரு முக்கியமான விஷயம், தாய்லாந்து டிஜிட்டல் அரைவல் கார்டு (TDAC). தாய்லாந்துக்குள்ள நுழையறதுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னாடி இதை ஆன்லைன்ல ஃபில் பண்ணனும்.
67
தாய்லாந்து பயண விதிகள்
விமானம், ரோடு, கடல்னு எந்த வழியில போனாலும் இது கட்டாயம். ஃபார்ம் ஃபில் பண்ணதும் வர்ற கன்ஃபர்மேஷனை பத்திரமா வெச்சுக்கோங்க. உங்க பயணம் தாய்லாந்தோட முடியல, அங்கிருந்து வேற நாட்டுக்கு போறீங்கன்னா, ஒரு விஷயத்தை ஞாபகம் வெச்சுக்கோங்க. நீங்க போகப்போற கடைசி நாட்டுக்குத் தேவையான விசா, பாஸ்போர்ட், மத்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் சரியா இருக்கணும்.
77
தாய்லாந்து செல்ல தேவையான ஆவணங்கள்
தாய்லாந்துல விசா தேவையில்லைங்கிறதுக்காக, அடுத்த நாட்டு விசா விதிகளை மறந்துடாதீங்க. மொத்தத்துல, செப்டம்பர் 15-க்கு பிறகு தாய்லாந்து போறவங்க, விசா தேவையில்லைங்கிறதை மட்டும் பார்க்காம, பாஸ்போர்ட் வேலிடிட்டி, ரிட்டர்ன் டிக்கெட், ஹோட்டல் புக்கிங், பணம், TDAC கார்டுனு எல்லாத்தையும் பக்காவா ரெடி பண்ணிட்டு கிளம்புறது நல்லது.