இந்தியா வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தேதி என்ன?
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வருகை தர உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று புதின் இந்தியாவுக்கு வர உள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வருகை தர உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று புதின் இந்தியாவுக்கு வர உள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Vladimir Putin will soon visit India: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வரும்படி புதினுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். இந்த அழைப்பை ஏற்று புதின் இந்தியா வர இருக்கிறார். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்தியா வருகைக்கான திட்டத்தை இன்று உறுதிப்படுத்தினார்.
ரஷ்ய அதிபர் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், புதின் வருகைக்கான தேதிகளை அவர் குறிப்பிடவில்லை. "அதிபர் விளாடிமிர் புதின் இந்திய அரசாங்கத் தலைவரின் (பிரதமர் மோடி) வருகைக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார். இந்தியாவுக்கு ரஷ்ய அரச தலைவரின் (புதின்) வருகை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது" என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டதாக செர்ஜி லாவ்ரோவ் குறிப்பிட்டார். "இப்போது எங்கள் முறை" என்று செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வரும் நிலையில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்யாவிற்கும் பயணம் செய்தார்.
திபெத்தில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு
அப்போது புதினும், மோடியும் இந்த போர், இந்தியா, ரஷ்யா உறவுகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது எந்த ஒரு போரும் வேண்டாம். அமைதியையே இந்தியா விரும்புகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதேபோல் உக்ரைனுக்கும் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தககது.
உக்ரைன், ரஷ்யா போரில் இந்தியா பல்வேறு கட்டங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளது. ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் இந்தியா, உக்ரைனுக்கு ஆதரவாக ஐநா கொண்டு வந்த பல்வேறு தீர்மானங்களில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்தார்.
அதன்பிற்கு உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கிய நிலையில், போருக்கு பிறகு புதின் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். போர் தொடங்கியதில் இருந்து புதின் பெரும்பாலும் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வருகிறார். ஆனால் பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அவர் இந்தியா வர சம்மதம் தெரிவித்துள்ளது இந்தியா, ரஷ்யாவுக்கு இடையேயான நெருக்காமான உறவை காட்டுவதாக அமைந்துள்ளது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அநேகமாக ஏப்ரல் அல்லது மே மாதத்தில் புதின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெனிசுலா எண்ணெய் மீது டிரம்ப் வரி: இந்தியாவுக்கு அதிக பாதிப்பா?