Published : Mar 26, 2025, 10:40 AM ISTUpdated : Mar 26, 2025, 12:08 PM IST
Mehul Choksi Extradition: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் இருப்பதாக பெல்ஜிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு நீதித்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும், இந்திய அதிகாரிகள் சோக்ஸியை நாடு கடத்த முயற்சி செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) கடன் மோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் மெஹுல் சோக்சி. இந்தியாவில் இருந்து தப்பியோடிய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, தங்கள் நாட்டில் இருப்பதை பெல்ஜியம் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
பெல்ஜியத்தின் கூட்டாட்சி பொது சேவை (FPS) வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் டேவிட் ஜோர்டன்ஸ், சோக்ஸியின் வழக்கை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார். இந்த விஷயம் கவனத்துடன் கையாளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெல்ஜிய அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து வரும் அதே வேளையில், இந்த விஷயத்தில் அதிகார வரம்பு முதன்மையாக நீதித்துறையிடம் உள்ளது எனக் கூறப்படுகிறது.
25
Who is Mehul Choksi?
சோக்ஸியைக் கண்காணிக்கும் பெல்ஜியம்:
மெஹுல் சோக்ஸி வழக்கு தொடர்பான முன்னேற்றங்களை வெளியுறவுத்துறை தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதாக ஜோர்டன்ஸ் உறுதியளித்தார்.
சோக்ஸியின் இருப்பிடம் குறித்து கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், பெல்ஜிய அதிகாரிகள் இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளதாகவும், ஏதேனும் குறிப்பிடத்தக்க தகவல் கிடைத்தால் தெரிவிக்கப்படும் என்றும் அவரது அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
முன்னதாக, ஆன்டிகுவா & பார்புடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் இ. பி. சேட் கிரீன், சோக்ஸியின் நிலையைப் பற்றி விளக்கினார். அவர் வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் இப்போது தங்கள் நாட்டின் குடிமகனாக இருக்கிறார் என்று தெளிவுபடுத்தினார்.
"மெஹுல் சோக்ஸி இங்கே இல்லை, அவர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதாகக் கூறப்படுகிறது. அவர் ஆன்டிகுவா & பார்புடாவின் குடிமகனாகவே இருக்கிறார். நாங்கள் சட்டத்தின் ஆட்சியை மதிக்கிறோம். சோக்ஸியின் வழக்கு சட்டப்பூர்வ மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது" என்று கிரீன் தெரிவித்தார்.
45
Fugitive Mehul Choksi Extradition
மெஹுல் சோக்ஸி மீதான வழக்கு என்ன?
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், சோக்ஸியும் அவரது மருமகன் நீரவ் மோடியும் இந்திய அதிகாரிகளால் தேடப்படுகிறார்கள். இந்த மோசடியில் அவர்கள் ரூ.14,000 கோடிக்கு சுருட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. சோக்ஸியை நாடுகடத்துவது தொடர்பாக இந்திய அரசாங்கமும் ஆன்டிகுவா & பார்புடா அரசாங்கமும் சட்ட நடைமுறைகள் மற்றும் ஜனநாயக விதிமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாக கிரீன் கூறியுள்ளார்.
55
Mehul Choksi in Belgium
நாடுகடத்தல் ஏன் தாமதமாகிறது?
சமீபத்தில் பெல்ஜிய குடியுரிமை பெற்றதால், சோக்ஸியின் நாடுகடத்தல் தாமதமாகியுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, அவர் பெல்ஜியத்தில் ஒரு எஃப் ரெசிடென்சி கார்டைப் பெற்றுள்ளார். இதன் மூலம் பெல்ஜியத்தைச் சேர்ந்த தனது மனைவி பிரீத்தி சோக்ஸியுடன் வசிக்கும் அனுமதியைப் பெற்றுள்ளார். இதனால், சோக்ஸியை நாடுகடத்துவதற்கான இந்தியாவின் முயற்சி சிக்கலாகியுள்ளது. ஏனெனில் சோக்ஸி இப்போது ஐரோப்பிய நாடுகளுக்குள் சுதந்திரமாகப் பயணிக்க முடியும்.
இதற்கிடையில், இந்திய அதிகாரிகள் சோக்ஸியை பெல்ஜியத்திலிருந்து நாடுகடத்தக் கோரியிருந்தனர். சோக்ஸி பெல்ஜியத்தில் குடியுரிமை பெறுவதற்கு மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதால் இந்தச் செயல்முறையும் தடைபட்டுள்ளது.