அமெரிக்கர்களுக்கு அடித்த யோகம்! டிரம்ப் வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!

Published : Nov 09, 2025, 10:31 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட புதிய வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை அமெரிக்கக் குடிமக்களுக்குப் பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ், குடிமக்கள் அனைவருக்கும் தலா 2,000 டாலர் வழங்கப்படும்.

PREV
13
டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப், தனது அதிரடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறார். இதில் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீது அவர் விதித்த புதிய வரிகள் ஆகும். சில நாடுகள் பேச்சுவார்த்தை மூலம் வரிகளைக் குறைத்துக் கொண்ட நிலையில், ட்ரம்பின் நிர்வாகம் இப்போது அந்த வரி வருவாயை அமெரிக்கக் குடிமக்களுக்குப் பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.

23
குடிமக்களுக்கு தலா 2,000 டாலர் அறிவிப்பு

அதிக வருமானம் ஈட்டுபவர்களைத் தவிர, மற்ற அனைத்து அமெரிக்கக் குடிமக்களுக்கும் ஒரு தவணையாக 2,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.77 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். பிற நாடுகள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையைக் குடிமக்களுக்குப் பிரித்துக் கொடுக்க உத்தேசித்துள்ளதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.

33
வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள்

இதுகுறித்து டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "வரிகளுக்கு எதிரானவர்கள் முட்டாள்கள். நாம் தற்போது உலகிலேயே பணக்கார, மதிப்புக்குரிய நாடு. அதிலும், கிட்டத்தட்ட பணவீக்கமே இல்லாமல், பெரும் அளவில் பங்குச் சந்தை மதிப்பீடு கொண்ட நாடாக இருக்கிறோம். அமெரிக்கக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தவணையாக 2,000 டாலர் வழங்கப்படும். அதேசமயம், இந்த நிதி அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறுபவர்களுக்குக் கிடையாது" எனத் தெரிவித்துள்ளார்.

டிரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பால், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கக் குடிமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories