சாப்பிடப் போனவருக்கு விழுந்த ரூ.25 கோடி பரிசு! ஒரே நாளில் வாழ்க்கையே மாறிடுச்சு!

First Published | Nov 16, 2024, 11:30 AM IST

மதிய உணவு கொடுக்க மறந்த மனைவியால் கணவருக்கு அதிர்ஷ்டம் வந்துவிட்டது. ஒரே லாட்டரியில் ரூ.25 கோடி பரிசைத் தட்டிச் சென்றவரின் கதையைத் தெரிந்துகொள்ளலாம்.

Lottery

பெரும்பாலும் மனைவிகள் தங்கள் கணவர்களுக்கு மதிய உணவு கொடுக்க மறந்துவிடுவார்கள் அல்லது மதிய உணவு பெட்டியை வீட்டில் விட்டுவிடுவார்கள். அப்போது கணவன்மார்களுக்கு வெளியில் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் உங்கள் மனைவியின் இத்தகைய தவறு உங்களை கோடீஸ்வரனாக்கினால்,  எப்படி இருக்கும்? உங்கள் மனைவி தினமும் இதுபோன்ற தவறை செய்ய வேண்டும் என்று விரும்புவீர்கள். ஆம், அப்படி ஒரு சம்பவம்தான் நடந்திருக்கிறது.

3 million dollars

அமெரிக்காவின் மிசௌரியை சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில் லாட்டரி டிக்கெட்டில் 3 மில்லியன் டாலர், அதாவது சுமார் 25 கோடி ரூபாய் பரிசு வென்றுள்ளார். லன்ச் பாக்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டதால், மதியம் சாப்பாடு வாங்க கடைக்குச் சென்றார். அங்கு மில்லியனர் பக்ஸ் என்ற லாட்டரி சீட்டை 30 டாலர் (சுமார் 2500 ரூபாய்) கொடுத்து வாங்கியுள்ளார். அதிர்ஷ்டக்கார ஆசாமியான அவருக்கு அந்த டிக்கெட்டை ஸ்கேன் செய்து பார்த்தபோது, ​​3 மில்லியன் டாலர் பரிசு விழுந்துவிட்டது.

Tap to resize

Lottery luck

இது குறித்து லாட்டரி நிறுவன அதிகாரிகளிடம் பேசுகையில், "நான் வழக்கமாக விலை உயர்ந்த டிக்கெட்டுகளை வாங்குவதில்லை. அன்று என் கையில் 60 டாலர் இருந்ததால், ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்து 30 டாலருக்கு ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கினேன்" என்று கூறினார். இவ்வளவு பெரிய தொகையை வென்ற செய்தியை தன் மனைவியிடம் கூறினார். ஆனால், அவரது மனைவி முதலில் அவரை நம்பவில்லை. பின்னர் நடந்ததை விளக்கிக் கூறியபோது அவரும் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாராம்.

Orange juice

இதேபோல இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் ஆரஞ்சு ஜூஸ் வாங்கச் சென்றபோது, ஒரு லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியது ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. கெர்னர்ஸ்வில்லியைச் சேர்ந்த கெல்லி ஸ்பார் கேஸ், ஜூஸ் வாங்கும்போது ஒரு லாட்டரி சீட்டைப் பார்த்து அதை வாங்கியுள்ளார். அவர் 20 டாலர் (சுமார் ரூ. 1600) கொடுத்து ஒரு டிக்கெட்டை வாங்கினார். அந்த மெர்ரி மல்டிபிளையர் லாட்டரியில் அவருக்கு 2,50,000 டாலர் (அதாவது சுமார் 2 கோடி ரூபாய்) பரிசாக கிடைத்தது.

Life Changes

லாட்டரியில் வந்த அதிர்ஷ்டம் பற்றி கூறியுள்ள ஸ்பார், "இது எங்கள் வாழ்க்கையையே மாற்றும் தருணம்" என்று கூறியுள்ளார். "இந்தத் தொகை எங்கள் குடும்பத்திற்கு பல புதிய கதவுகளை திறக்க உதவும். ஒரு வித்தியாசமான வடிவமைப்புடன் இருந்த ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்க முடிவு செய்தேன். அந்த முடிவுதான் இந்த வெற்றியைக் கொடுத்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!