நர மாமிசம் எல்லாம் சகஜம்! சக மனிதனையே கொன்று உண்ணும் பழங்குடி மக்கள்! எங்க இருக்காங்க தெரியுமா?

First Published | Jun 16, 2024, 5:52 PM IST

பப்புவா நியூ கினியாவில் கொரோவாய் என்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் மனிதர்களைக் கொன்று சாப்பிடுவதை சகஜமாக செய்துவருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஆடை அணிவது கிடையாது.

Papua new guinea Korowai cannibalism

நாகரிக வளர்ச்சி அடைவதற்கு முந்தைய மிகப் பழங்காலத்தில் ஆதி மனிதர்கள் மிருகங்களைப் போலவே வாழ்ந்தார்கள். படிப்படியான வளர்ச்சியில் இப்போது மனிதர்கள் நவநாகரிக வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டனர். ஆனால், இன்னும் மாற்றம் அடையாத இடங்களும் உள்ளன

Papua new guinea Korowai tribes

கற்காலத்தில் வாழ்ந்ததைப் போலவே இன்றும் வாழும் மக்கள் பூமியில் சில பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்கள் மிருகங்களை மட்டுமின்றி சக மனிதர்களையே கொன்று வேட்டையாடி சாப்பிடுகிறார்கள். வேட்டையாடுவதற்கு வில், அம்பு, ஈட்டி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள்.

Tap to resize

Korowai cannibals

பப்புவா நியூ கினியாவில் கொரோவாய் என்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் மனிதர்களைக் கொன்று சாப்பிடுவதை சகஜமாக செய்துவருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஆடை அணிவது கிடையாது. காகுவா என்ற அரக்கன் மனிதர்களுக்குள் புகுந்து அந்த நபரை சூனியக்காரர்களாக மாறுகிறான் என்பது கொரோவாய் மக்களின் நம்பிக்கை.

cannibalism as a punishment

இதனால், பேய் பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொன்று சாப்பிட்டுவிட வேண்டும் என்று நம்புகிறார்கள். வெளியுலக மனிதர்களிடம் இருந்து விலகியே இருக்கும் இவர்கள், சந்தேகத்துக்கு இடமாக யாராவது வந்தால் கொன்று உணவாக்கிக் கொள்கிறார்கள்.

Papua new guinea cannibalism

இந்த் பழங்குடி மக்கள் மனித மாமிசத்தின் சுவை காட்டுப்பன்றி அல்லது ஈமு கோழி போல இருக்கும் என்கிறார்கள். முடி, நகங்கள் மற்றும் ஆணுறுப்பைத் தவிர மனித உடலின் அனைத்து பாகங்களையும் உண்கிறார்கள்.

Korowai tribal people

அதே நேரத்தில் இந்த மனித இறைச்சியை உண்பதில் கன்டிஷன்களும் வைத்திருக்கிறார்கள். 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மனித இறைச்சியைச் சாப்பிடக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. மனித இறைச்சி குழந்தைகளுக்கு ஆகாது என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Papua new guinea tribes

ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள சிறிய நாடான பப்புவா நியூ கினியா, உலகில் மனிதர்கள் வாழ்வதற்கு மிக மோசமான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நாட்டு மக்களே முரட்டுத்தனமானவர்கள் கருதப்படுகிறார்கள்.

Papua new guinea

பெண்களுக்கு எதிரான அவலமும் அதிகமாக உள்ளது. குடும்ப வன்முறை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்கள் சகஜமாக நடக்கின்றன . குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கூட தண்டனை கிடைக்கும் என்று உத்தரவாதம் கிடையாது என்று சொல்கிறார்கள்.

Latest Videos

click me!