வட கொரியாவில் அதிபர் கிம் ஜாங்-உன், "ஹேம்பர்கர்," "ஐஸ்கிரீம்" போன்ற ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளார். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுற்றுலா வழிகாட்டிகளுக்கு மாற்றுச் சொற்கள் கற்பிக்கப்படுகின்றன.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், ஆங்கில வார்த்தைகளான "ஹேம்பர்கர்," "ஐஸ்கிரீம்," மற்றும் "கரோக்கி" ஆகியவற்றை பயன்படுத்த தடை விதித்துள்ளார். வட கொரிய மொழி மற்றும் அதன் சொற்களை ஊக்குவிக்கும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக இந்தத் தடை பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு கலாசார ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் இந்தத் தடை உத்தரவு போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
25
சுற்றுலா வழிகாட்டிகளுக்கு கட்டாயம்
புதிதாக திறக்கப்பட்ட வோன்சான் கடற்கரை ரிசார்ட்டில் சுற்றுலாப் பயணிகளிடம் பேசும் வழிகாட்டிகளுக்கு, இந்த குறிப்பிட்ட வார்த்தைகளை கண்டிப்பாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"ஹேம்பர்கர்" என்ற வார்த்தைக்குப் பதிலாக, “dahin-gogi gyeopppang” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். "ஐஸ்கிரீம்" என்பதற்கு "eseukimo" என்றும், "கரோக்கி" மெஷின்களுக்கு "on-screen accompaniment machines" என்றும் வழிகாட்டிகள் பயன்படுத்த வேண்டும்.
35
மனப்பாடம் செய்ய வேண்டும்
அரசு நடத்தும் ஒரு பயிற்சி திட்டத்தின் மூலம் வழிகாட்டிகள் இந்த அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சொற்களையும், கோஷங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டும்.
இந்த மொழி தொடர்பான கட்டுப்பாடுகள், வட கொரியாவில் வெளிநாட்டு ஊடக நுகர்வுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகும். வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்ப்பது அல்லது பகிர்வது பிடிபட்டால், மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை கிம் ஜாங்-உன் அரசாங்கம் விதித்து வருகிறது.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கை, கடந்த பத்தாண்டுகளில் வட கொரியாவில் வெளிநாட்டு ஊடகங்களை அணுகுபவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, தென் கொரிய நாடகங்கள் பார்ப்பது, வெளிநாட்டு இசை கேட்பது அல்லது தடை செய்யப்பட்ட திரைப்படங்களைப் பகிர்வது போன்ற குற்றங்களுக்காக வீடுகளில் சோதனை, கடுமையான தண்டனைகள் மற்றும் பொது மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
55
தகவல் பெற்றறால் குற்றம்
2015ஆம் ஆண்டு முதல், விரோத நாடுகளிலிருந்து தகவல் பெறுவதைக் குற்றமாக்கி வடகொரிய அரசு சட்டம் இயற்றியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அடக்குமுறைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த அபாயங்கள் இருந்தபோதிலும், பல வட கொரியர்கள் கடத்தி வரப்பட்ட USB-க்கள் மற்றும் சட்டவிரோத ரேடியோ ஒலிபரப்புகள் மூலம் தடை செய்யப்பட்ட ஊடகங்களை இன்னமும் அணுகி வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.