Nepal Protest: பற்றி எரியும் நாடாளுமன்றம்! அமைச்சரை தாக்கி தரதரவென ரோட்டில் இழுத்துச் சென்ற கொடூரம்!

Published : Sep 09, 2025, 05:55 PM IST

இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் நேபாள நாடாளுமன்றம் பற்றி எரிகிறது. அந்த நாட்டு நிதி அமைச்சரை மக்கள் தாக்கும் வீடியோ வைரலாகிறது.

PREV
14
Nepal Protest

பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூகவலைத்தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் பொங்கியெழுந்தனர். சமூக ஊடகங்கள் மற்றும் ஊழலுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக நேபாள தலைநகர் காத்மாண்டு மற்றும் பிற நேபாள நகரங்களில் திங்களன்று ஜெனரல் இசட் பதாகையின் கீழ் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கினார்கள்.

24
நேபாளத்தில் வன்முறை

இந்த போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த போராட்டங்களின் போது குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலைமை கையை மீறிச் சென்ற நிலையில், நோபாள பிரதமர் ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராணுவத்தின் உதவியுடன் நாட்டில் இருந்து தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

34
பற்றி எரியும் நாடாளுமன்றம்

நேபாளத்தில் தொடர்ந்து போராட்டம் வலுத்து வரும் நிலையில், போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் நாடாளுமன்றம் பற்றி எரிகிறது. இந் நிலையில் இன்று நேபாள நாட்டின் நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேல் சாலையில் துரத்தப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அமைச்சர் பிஷ்ணு பிரசாத்தை துரத்துவதையும் அவர் உயிருக்கு பயந்து தப்பி ஓடும் வீடியோ காட்சிகளும் பதிவாகி உள்ளன.

44
அமைச்சரை விரட்டி தாக்குதல்

மேலும் ஒரு நபர் அமைச்சர் பிஷ்ணு பிரசாத்தை உதைப்பதையும் மற்றவர்கள் அவரை அடிப்பதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. நேபாள அரசு சமூக ஊடகங்களுக்கான தடையை விலக்கிக் கொண்டாலும் போராட்டம் ஓயவில்லை. தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டக்காரர்கள் அமைச்சர்களின் வீடுகளையும் அரசு கட்டிடங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா ஆகியோர் காயமடைந்தனர்

Read more Photos on
click me!

Recommended Stories