Published : Feb 20, 2025, 09:27 PM ISTUpdated : Feb 20, 2025, 09:43 PM IST
NASA to destroy asteroid 2024 YR4: 2032 டிசம்பரில் பூமியுடன் மோதக்கூடிய ஒரு சிறுகோளை அழிக்க நாசா அவசரகாலத் திட்டங்களைத் தயாரித்து வருவதாக சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 2024 YR4 என்ற சிறுகோள் பூமியைத் தாக்க 1.5% வாய்ப்பு உள்ளது. முந்தைய கணிப்பில் 2.6% வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இப்போது ஆபத்து சற்று குறைந்துள்ளது. ஆனால், ஜனவரி மாதத்தின் ஆரம்ப மதிப்பீட்டான 1% ஐ விட இப்போது அதிகமாகியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் தேவைப்பட்டால் அதனை அழிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆலோசித்து செய்துவருகின்றன.
26
NASA to destroy asteroid 2024 YR4
"இது நிச்சயமாக நாசாவில் விவாதப் பொருளாக இருக்கிறது. ஆனால், யாரும் பீதியடையத் தேவையில்லை" என்று அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மைய திட்ட மேலாளர் கூறியுள்ளார். "நமக்கு செயல்பட போதுமான நேரம் இருக்கிறது, ஆனால் திட்டமிடலை இப்போதே தொடங்க வேண்டும். கடைசி நிமிடத்தில் செய்ய முடியாது" எனவும் அவர் கூறுகிறார்.
36
NASA to destroy asteroid 2024 YR4
இந்த சிறுகோள் 130 முதல் 300 அடி அகலம் கொண்டது. இது சுதந்திர தேவி சிலையின் உயரத்திற்கு சமம். இது பூமியைத் தாக்கினால், 110 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். கிழக்கு பசிபிக், வடக்கு தென் அமெரிக்கா, அட்லாண்டிக், ஆப்பிரிக்கா, அரேபிய கடல் மற்றும் தெற்காசியாவில் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
46
NASA to destroy asteroid 2024 YR4
தற்போது மணிக்கு 40,000 மைல் வேகத்தில் பயணிக்கும் 2024 YR4 சிறுகோள், தாக்கும்போது எட்டு மெகாடன் TNT ஆற்றலை வெளியிடும். இது ஹிரோஷிமா வெடிப்பை விட தோராயமாக 500 மடங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது ஒரு பேரழிவை ஏற்படுத்தி ஏராளமான உயிர்களையும் பறிக்கக்கூடும். குறிப்பாக, இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, டாக்கா, பொகோட்டா மற்றும் லாகோஸ் ஆகியவை ஆபத்தில் உள்ள நகரங்கள் என நாசா கூறுகிறது.
56
NASA to destroy asteroid 2024 YR4
மார்ச் மாதத்தில் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் வெப் விண்வெளி தொலைநோக்கி இந்த சிறுகோள் குறித்து மேலும் ஆய்வுகளை மேற்கொள்ளும். பின்னர் அது தற்காலிகமாக கவனிக்க முடியாத நிலைக்குச் சென்றுவிடும்.2028 ஆம் ஆண்டில் மீண்டும் தெரியும். இதனால் விஞ்ஞானிகள் அதன் பாதையைக் கண்காணிக்கவும் உண்மையான ஆபத்தை மதிப்பிடவும் அவகாசம் உள்ளது.
66
NASA to destroy asteroid 2024 YR4
2024 YR4 சிறுகோள் தற்போது அபாய அளவுகோலில் 10 இல் 3 ஆம் நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது . இது 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறுகோள்களால் ஏற்பட சாத்தியமான மிகப் பெரிய ஆபத்துக்கான எச்சரிக்கை ஆகும். இதற்கு முன் அப்போபிஸ் என்ற சிறுகோள் நிலை 4 ஐ அடைந்தது. பின்னர் அது 2029 இல் பூமியைக் கடந்து செல்லும் என உறுதிப்படுத்தப்பட்டது.