Published : May 04, 2025, 04:05 PM ISTUpdated : May 04, 2025, 05:28 PM IST
அமெரிக்காவைச் சேர்ந்த டிம் ஃப்ரைட், 20 ஆண்டுகளில் 200 முறைக்கும் மேல் நாகப்பாம்பு மற்றும் கருப்பு மாம்பா போன்ற விஷப் பாம்புகளால் கடிக்கப்பட்டுள்ளார். 700 முறைக்கும் மேல் பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் ஒரு புனிதப் பணியை நிறைவேற்றவே செய்துள்ளார்.
டிம் ஃப்ரைட் முன்பு ஒரு லாரி மெக்கானிக்காக இருந்தார். உலகின் மிகக் கொடிய பாம்புகளின் விஷத்திற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள அவர் தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார். அவரது உதவியுடன் விஞ்ஞானிகள் இதுவரை இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த விஷமுறிவு மருந்தை உருவாக்கியுள்ளனர். இது ஒருநாள் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
26
200+ பாம்புக்கடிகள்
விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள்:
பிபிசி அறிக்கையின்படி, டிம் ஃப்ரைட், பிளாக் மாம்பா, கோப்ரா, கிரெய்ட் மற்றும் தைபன் போன்ற மிகவும் விஷமுள்ள பாம்புகளால் 200க்கும் மேற்பட்ட முறை கடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 700க்கும் மேற்பட்ட முறை பாம்பு விஷ ஊசி போடப்பட்டுள்ளது. அவர் இப்போது வரை உயிருடன் இருக்கிறார். ஒருமுறை தொடர்ச்சியாக இரண்டு நாகப்பாம்புகள் கடித்ததால் அவர் கோமா நிலைக்குச் சென்றார்.
36
பாம்புக்கடிக்கு சிகிச்சை
பாம்பு விஷம்:
பாம்பு கடிக்கான சிகிச்சையில் விஷமுறிவுக்காக ஒரு குறிப்பிட்ட எதிர் விஷம் மருத்தாக பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக பாம்பு விஷம் குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு செலுத்தப்பட்டு, அவற்றின் இரத்தத்திலிருந்து ஆன்டிபாடிகள் சேகரிக்கப்படுகின்றன. அதிலிருந்து விஷ எதிர்ப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த முறைக்கு சில வரம்புகள் உள்ளன. ஒரே பாம்பு இனத்தின் விஷம், அது வாழும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். இதன் பொருள், ஒரு நாட்டில் பாம்புகளுக்கு தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்து மற்றொரு நாட்டில் அந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்காது.
இந்நிலையில், விஷமுறிவுக்கான ஒரு சிறந்த தீர்வைத் தேடி, விஞ்ஞானிகள் குழு வேறு வகையான பாதுகாப்பில் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு பாம்பு இனங்களில் பொதுவாகக் காணப்படும் விஷத்தின் பகுதிகளை இலக்காகக் கொள்ளும் வகையில் விஷமுறிவு மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
56
டிம் ஃப்ரைட்டின் இரத்தத்தில் சக்தி
நியூரோடாக்சின் எதிர்ப்பு ஆன்டிபாடிகள்:
உயிரி தொழில்நுட்ப நிறுவனமான சென்டிவாக்ஸின் தலைவரான டாக்டர் ஜேக்கப் கிளான்வில், மிகவும் சக்திவாய்ந்த ஆன்டிபாடியை உருவாக்க டிம் ஃப்ரைடுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஃப்ரைடின் இரத்தத்தில் எலாபிட் பாம்புகள் பயன்படுத்தும் மூன்று முக்கிய வகையான நியூரோடாக்சின்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிபாடிகள் இருந்தன. இந்த ஆன்டிபாடிகளிலிருந்து ஒரு விஷமுறிவு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இவை எலிகள் மீது சோதிக்கப்பட்டுள்ளன.
66
சோதனை முடிவுகள்
பல உயிர்களைக் காப்பாற்றலாம்:
சோதனையின் போது, இந்த விஷமுறிவு மருந்து 19 பாம்பு இனங்களில் 13 வகைகளின் கொடிய விஷத்திலிருந்து எலிகளைப் பாதுகாத்தது. மீதமுள்ளவற்றிலிருந்து பகுதி பாதுகாப்பை வழங்கியது. இந்த மருந்தின் செயல்பாட்டை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது என்று டாக்டர் கிளான்வில் கூறுகிறார். இது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்றும் கூறுகிறார்.