UAE Indians Alert: அமீரக வாழ் இந்தியர்களுக்கு முக்கிய செய்தி! பாஸ்போர்ட், விசா சேவைகளில் அதிரடி மாற்றம்

Published : Jun 13, 2026, 09:46 PM IST

UAE Indians Alert: ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளில் முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் மாறப்போகும் விதிகள் குறித்து பார்க்கலாம்.

PREV
15
ஐக்கிய அரபு அமீரக வாழ் இந்தியர்களுக்கு அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை பாதிக்கும் வகையில், அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாஸ்போர்ட், விசா மற்றும் பிற தூதரக சேவைகளை வழங்கிய BLS இன்டர்நேஷனல் மற்றும் SGIVS குலோபல் நிறுவனங்களுக்கு பதிலாக, அல்ஹிந்த் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் புதிய சேவை வழங்குநராக நியமிக்கப்பட்டுள்ளது.

25
ஜூலை 1 முதல் புதிய நடைமுறை

தூதரகத்தின் தகவலின்படி, ஜூன் 30 வரை பழைய மையங்கள் வழியாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், ஜூலை 1 முதல் சமர்ப்பிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களும் அல்ஹிந்த் நிறுவனத்தின் புதிய மையங்கள் மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படும்.

35
அமீரகம் முழுவதும் 16 புதிய மையங்கள்

இந்த மாற்றத்தின் ஒரு பகுதி, அபுதாபி, துபாய், ஷார்ஜா உள்ளிட்ட ஏழு எமிரேட்டுகளில் மொத்தம் 16 புதிய சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்திய சமூகத்திற்கான சேவைகளை மேலும் எளிதாக்கவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதே இதன் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

45
எந்த இடங்களில் மையங்கள்?

அபுதாபியில் ஆறு மையங்கள், துபாயில் இரண்டு, ஷார்ஜாவில் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அஜ்மான், ஃபுஜைரா, உம் அல் குவைன், கோர்ஃபக்கான், கல்பா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய பகுதிகளிலும் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

55
வதந்திகளை நம்ப வேண்டாம்

புதிய மையங்களின் முகவரிகள், சேவை கட்டணங்கள், அப்பாயிண்ட்மென்ட் பதிவு நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை தவிர்த்து, இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories