Published : Apr 19, 2025, 12:42 PM ISTUpdated : Apr 19, 2025, 12:55 PM IST
ஜாக் டேனியல்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும் சம்பளத்துடன் மதுபான பாட்டிலைப் பரிசாக வழங்குகிறது. இந்த 'குட் ஃப்ரைடே' நடைமுறை நிறுவனத்தின் பாரம்பரியத்தையும் ஊழியர்களுக்கு அந்நிறுவனம் வழங்கும் மரியாதையையும் எடுத்துக்காட்டுகிறது.

25
Jack Daniels Tennessee
அமெரிக்காவின் லிஞ்ச்பர்க்கில் உள்ள ஜாக் டேனியல்ஸ் மதுபான நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையும் சம்பளத்துடன் மதுபான பாட்டிலும் வழங்க உள்ளது.
35
Jack Daniel’s complimentary bottle
"குட் ஃப்ரைடே" என்று அழைக்கப்படும்ம அந்த நாளில், தனது ஊழியர்களின் கடின உழைப்புக்கு பாராட்டு தெரிவிக்கும் அடையாளமாக ஜாக் டேனியல்ஸ் ஓல்ட் நம்பர். 7 மது பாட்டிலைப் அவர்களுக்கு வழங்குகிறது. இந்நிறுவனத்தைத் தொடங்கிய ஜாக் காலத்திலிருந்தே நடந்து வருகிறது.
45
Jack Daniel’s Distillery
இது மட்டுமில்லாமல், ஜாக் டேனியல்ஸ் தனது ஊழியர்களுக்கு அடிக்கடி ஆச்சரியப் பரிசுகளையும் வழங்கும். லெகசி எடிஷன், எக்ஸ்போர்ட் ஒன்லி எடிஷன் ஆகிய சிறப்பு மது பாட்டில்களை அவ்வப்போது பரிசாக வழங்குகிறது. மாதாந்திர சம்பளத்துடன் இந்தப் பரிசையும் கொடுப்பது ஊழியர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது.
55
Jack Daniel’s Empolyees
இந்த 'குட் ஃப்ரைடே' நடைமுறை நீண்டகாலமாகவே உள்ளது. இது ஜாக் டேனியல்ஸ் தனது ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் போற்றுவது மட்டுமில்லாமல், நிறுவனத்தின் வளமான பாரம்பரியத்தையும் உணர்த்துகிறது. ஊழியர்களுக்கு அந்நிறுவனம் வழங்கும் மரியாதையையும் எடுத்துக்காட்டுகிறது.