ரகசியம் காக்க ஒப்பந்தம்:
ஆனால் கிளேர் எலான் மஸ்க்தான் தனது குழந்தைக்குத் தந்தை என்பதை ரகசியமாக வைத்திருக்க ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மட்டும் மஸ்க் பெயரைத் தவிர்க்க் முடிவுசெய்திருக்கிறார். பிப்ரவரியில் தங்கள் உறவைப் பற்றி அவர் பகிரங்கப்படுத்திய பிறகு, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த மாதாந்திர ஆதரவுத் தொகை 40,000 டாலராகக் குறைக்கப்பட்டது - பின்னர் மாதம் 20,000 டாலர் என மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோ செல்வாக்கு மிக்க டிஃப்பனி ஃபாங் போன்ற பிற பெண்களிடம் குழந்தைகளைப் பெறுவதற்கான சலுகைகளை மஸ்க் வழங்கியதாகவும் அறிக்கை கூறுகிறது. ஃபாங் இந்த செய்திகளைப் பொதுவில் பகிர்ந்த பிறகு, மஸ்க் அவரைப் பின்தொடர்வதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
எலான் மஸ்க் தனது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் தனது கட்டுப்பாட்டில் இருக்க பணம் மற்றும் கடுமையான ரகசிய ஒப்பந்தங்களைப் போடுவதாக செயிண்ட் கிளேர் உட்பட பல பெண்கள் கூறுகின்றனர். அவரது உதவியாளர் ஜாரெட் பிர்ச் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, எலான் மஸ்க் $367.9 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராகவும், அமைச்சரவை ஆலோசகராகவும் உள்ளார்.