ஈரானை முடக்கிய இஸ்ரேல்.. அமெரிக்காவுக்கு எதிராக புடின்.. 3ம் உலகப்போர் ஆரம்பமா?

First Published | Oct 2, 2024, 2:09 PM IST

காசாவில் ஹமாஸ் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் தற்போது லெபனானில் ஹிஸ்புல்லா குழுக்களை குறிவைத்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இஸ்ரேலின் ஜஃபாவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

World War 3

மத்திய கிழக்கில் போர் மிகுந்த நிலையில் நீடித்துக் கொண்டே இருக்கிறது. இது உலக அளவில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பெரும் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. காசாவில் ஹமாஸ் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பின்பாக, இஸ்ரேல் தற்போது அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுக்களை இலக்கு வைத்து தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற தாக்குதல்களில், ஹிஸ்புல்லா இயக்கத்தின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இஸ்ரேல் படைகள் சுட்டுக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி, தெற்கு லெபனானின் எல்லைக்கு கூடுதல் படைகளையும் அனுப்பியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்கூட்டியே தகவல் பகிரப்பட்டதாகவும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

Israel

குறிப்பாக நேற்று அதிகாலை, தெற்கு லெபனானில் அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து, ஹிஸ்புல்லா ராணுவ நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் தொடங்கியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அதேபோல நேற்று முதல் ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் கடலோர நகரமான ஜஃபாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் வன்முறைச் சம்பவம் அரங்கேறியது. ஒருங்கிணைந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈரான் இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்தது. இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான நேரம் மற்றும் சாத்தியமான தொடர்புகள் குறித்து கவலைகளை எழுப்பியது என்றே கூறலாம். வெளியாகியுள்ள செய்திகளின்படி, தாக்குதல் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் கூடிய இரண்டு தாக்குதல் நடத்தியவர்கள் ஜெருசலேம் பவுல்வர்டில் உள்ள லைட் ரயில் நிறுத்தத்தில் ரயிலில் இருந்து இறங்கினர்.

Latest Videos


Hebrew

கருப்பு உடையில் இருந்த தாக்குதல் நடத்தியவர்கள், அருகிலுள்ள ஒரு தெருவில் தங்கள் தாக்குதலைத் தொடர்வதற்கு முன், கடந்து சென்றவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஈரானின் தலைவரும், உச்சபட்ச அதிகாரம் கொண்ட இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் எண்ணெய் ஆதாரங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, ஈரான் நாட்டின் பொருளாதாரத்தை நிலை குலைய வைக்கக வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ஆனது ஈரானின் எண்ணெய் வள ஆதாரங்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி அதன் வளத்தை தகர்த்துள்ளது. மக்கள் மீது தாக்குதல் நடத்தாமல், ஈரானின் பொருளாதாரம் மீது தாக்குதல் நடத்தி சீர்குலைத்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலுக்கு ஐநா முதல் அமெரிக்கா வரை கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா ஈரானுக்கு உதவும் என்றும், இதனையடுத்து 3ம் உலகப்போர் நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Iran

இஸ்ரேல் ஒரு கிறித்துவ மதத்தை சேர்ந்த நாடு ஆகும். இதற்கு அண்டையில் உள்ள நாடுகள் முஸ்லீம் மதத்தை சேர்ந்த நாடுகளாக உள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க நிற்பதால், ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா நிற்கும் என்று நம்பப்படுகிறது.  அமெரிக்காவும் நேட்டோவும் தலையிட்டு இஸ்ரேலுக்கு உதவ முயற்சிப்பதால் இது முழு உலகத்தையும் குழப்பத்தில் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா ஏற்கனவே அக்டோபர் 1 அன்று ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. அமெரிக்காவும், ரஷ்யாவும் பிராந்திய வீரர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளன. மிகப்பெரிய சக்தியான சவுதி அரேபியா அமெரிக்க நட்பு நாடாக இருக்கும் அதே வேளையில், ஈரான் மற்றும் சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சி ரஷ்யாவின் ஆதரவைக் கொண்டுள்ளன. ரஷ்யா தனியாக இல்லை. இது அரசியல் நலன்கள் என்று வரும்போது சீனா மற்றும் வட கொரியாவின் ஆதரவைக் கொண்டுள்ளது.

Ayatollah Ali Khamenei

அதனால் ரஷ்யா-உக்ரைன் போர் உலக அரங்கில் விவாத பொருளாக மாறியது. மாஸ்கோ தனது அதிகாரங்களைக் குறைக்கும் ஒரு இராணுவக் குழுவாகக் கருதும் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோவிற்கு உக்ரேனைத் தாக்கியது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு முடிவே இல்லை. இப்போது உலகம் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலுக்கும், ஈரானின் பினாமிகளுக்கும் இடையிலான மோதலைத் தணிக்கும் ஜோ பைடன் நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, பென்டகன் சில ஆயிரம் கூடுதல் அமெரிக்கத் துருப்புக்களையும், மேலும் போர் விமானங்களையும் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனர். இஸ்ரேல் மீதான நேரடி ஈரானியத் தாக்குதல் 3ம் உலகப் போரின் ஆரம்பம் என்று பலரும் நம்புகிறார்கள். இருப்பினும், 3ம் உலகப் போரின் சூழல் இன்னும் உலகத்துடன் முன்பை விட மிகவும் நெருக்கமாக மாறியுள்ளது.

1 ரூபாய் கூட இல்லாமல் இந்த நாட்டில் பயணம் செய்யலாம்.. எல்லாமே இலவசம்.. எந்த நாடு தெரியுமா?

click me!