பாபா வாங்கா கணிப்புகள் உண்மையாகியுள்ளதா?
அதிகப்படியான மாசுபாடு மற்றும் இயற்கை வளங்களை வீணடிப்பதால், பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் என்றும். புவி வெப்பாகி பேரழிவு ஏற்படும் என்றும் பாபா வாங்கா ஏற்கனவே கணித்ததாக கூறப்படுகிறது. அதேபோல சயின்ஸ் அட்வான்சஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகளாவிய வெப்ப அலைகள் 67 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த வெப்ப அலைகளின் போது அதிக வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவானதை விட அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
அதே போல வாங்காவின் கணிப்புகள் அனைத்தும் வெறும் அழிவு பற்றியது மட்டுமல்ல என்றும், மாறாக அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கான மருந்தை 2024 ஆம் ஆண்டில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் கணித்தார் என்று நம்பப்படுகிறது. இந்த சூழலில் தான் இந்தியா தனது சொந்த HPV (மனித பாப்பிலோமா வைரஸ்) இந்த ஆண்டு உருவாக்கியது. இப்படி பாபா வாங்காவின் கணிப்புகள் அடுத்தடுத்து உண்மையாகி வருவதாக கூறப்படுகிறது.