Published : Nov 10, 2024, 07:52 AM ISTUpdated : Nov 10, 2024, 11:07 AM IST
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் பல ஆடம்பர வசதிகள் கொண்ட தனியார் ஜெட் விமானத்தைப் பயன்படுத்துகிறார். அந்த ஜெட் விமானத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்.
47வது அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தும் தனிப்பட்ட விமானம் அவரது ஆடம்பர வாழ்க்கையின் அடையாளமாக உள்ளது. 'ட்ரம்ப் ஃபோர்ஸ் ஒன்' என்ற அந்த ஜெட் விமானம் தங்க அலங்காரத்துடன் பல ஆடம்பர வசதிகளைக் கொண்டது.
27
Inside Trump's Private jet
டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட விமானம் போயிங் 757-200 மாடலாகும். இதற்கு 'ட்ரம்ப் ஃபோர்ஸ் ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விமானம் என்பது வெறும் போக்குவரத்து சாதனம் மட்டுமல்ல, ஆடம்பரத்தின் சின்னமாகவும் உள்ளது. டிரம்ப் தனது அரசியல் பிரச்சாரங்கள் மற்றும் பேரணிகளுக்கு இந்த விமானத்தை பயன்படுத்துகிறார். அவர் 2011ஆம் ஆண்டில் இந்த விமானத்தை சுமார் 100 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார்.
37
Inside Trump's Private jet
இந்த ஜெட் விமானத்தில் விசாலமான படுக்கையறை உள்ளது. பிரத்யேகமான பொழுதுபோக்கு அமைப்பு உள்ளது. உணவு அருந்த தனி பகுதி உள்ளது. அங்கு சுவையான பலவகை உணவுகளை ருசிக்க முடியும்.
47
Inside Trump's Private jet
டிரம்பின் பிரைவேட் ஜெட் விமானத்தில் மாஸ்டர் குளியலறையில் தங்க முலாம் பூசப்பட்ட வாஷ்பேசின் உள்ளது. இத்துடன் நின்றுவிடாமல், விமானத்தின் மற்ற பாகங்களிலும் தங்கத்தால் ஆன பொருள்கள் உள்ளன.
57
Inside Trump's Private jet
இந்த விமானத்தின் குளியலறையிலும் தங்கத்தால் இழக்கப்பட்டுள்ளது. தண்ணீர் குழாய்கள் முதல் பாத் டப் வரை பலவும் தங்கத்தில் ஜொலிக்கின்றன. இது டிரம்பின் தனிப்பட்ட ஜெட் விமானத்தை மிக ஆடம்பரமானதாகக் காட்டுகிறது.
67
Inside Trump's Private jet
டொனால்ட் டிரம்பின் தனிப்பட்ட ஜெட் விமானத்தில் சீட் பெல்ட்கள் கூட சாதாரணமானவை அல்ல; அவை 24 காரட் தங்கத்தால் முலாம் பூசப்பட்டுள்ளன. இவை விமானத்தின் ஆடம்பரத்தை அதிகரிக்கின்றன.
77
Inside Trump's Private jet
விமானத்தின் ஹெட்ரெஸ்ட் மற்றும் தலையணைகள் டிரம்ப் குடும்ப அடையாளத்தைக் கொண்டவை. இந்த அடையாளம் விமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இடம்பெறுகிறது. அவரது பிராண்டை பிரதிபலிக்கும் தங்க டிரிம்களையும் கொண்டிருக்கிறது.