பூமிக்கு வந்த சொர்க்கம்! வருடத்தில் 300 நாட்கள் வர்ண ஜாலத்தில் திளைக்கும் நகரம்!

Published : Nov 09, 2024, 01:02 PM ISTUpdated : Nov 09, 2024, 01:04 PM IST

மனதை மயக்கும் வடதுருவ வர்ண ஜாலத்தை அனுபவிக்க கனடாவில் உள்ள ​​சர்ச்சில் என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும். பூமியின் வட துருவத்திற்கு நெருக்கமாக உள்ள இந்தச் சிறிய நகரத்தில் ஒரு வருடத்தில் 300 நாட்களும் வானம் ஒளி வெள்ளத்தில் மிக அழகாகக் காட்சி அளிக்கிறது.

PREV
17
பூமிக்கு வந்த சொர்க்கம்! வருடத்தில் 300 நாட்கள் வர்ண ஜாலத்தில் திளைக்கும் நகரம்!
Northern lights or Aurora Borealis in Churchill

சர்ச்சில் நகரில் வானம் ஆண்டு முழுவதும் சராசரியாக 300 நாள்களுக்கு மேல் வடதுருவ வர்ண  ஜாலத்தை நிகழ்த்துகிறது. அரோரா எனப்படும் இந்த வானியல் நிகழ்வு அதிகம் நடைபெறும் துருவப் பகுதியின் மையத்தில் சர்ச்சில் நகரம் அமைந்துள்ளது.

27
Churchill Northern lights

குறிப்பாக, குளிர்கால இரவுகளில் மிகவும் அற்புதமான காட்சிகள் நிகழ்கின்றன. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தான் வானம் தெளிவாகவும் இருட்டாகவும் இருக்கும்.

37
Churchill aurora activity

இந்த வானியல் நிகழ்வை மிகச் சிறப்பாகக் காண, நிலவொளி போன்ற வேறு விதமான ஒளி அதிகமாக இல்லாமல் இருப்பது அவசியம். சர்ச்சில் நகரம் இந்த விஷயத்திலும் தனித்துவமானது. வானத்தில் அரோரா நிகழ்வைக் காண வசதியான பல தங்குமிடங்கள் இந்த நகரத்தில் உள்ளன.

47
Churchill, the polar bear capital

தொடர் அரோரா நிகழ்வுக்காக மட்டுமின்றி, சர்ச்சில் நகரம் போலார் பியர் எனப்படும் துருவக் கரடிகளுக்காகவும் புகழ்பெற்றது. 'துருவ கரடிகளின் தலைநகரம்' என்றும் பெயர் பெற்றுள்ளது. துருவக் கரடிகள் மட்டுமின்றி, அற்புதமான பல உயிரினங்களை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் பார்க்கும் அரிய வாய்ப்பைப் பெறலாம்.

57
Churchill beluga whales

பெலுகா திமிங்கலங்களும் சர்ச்சில் கடல் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த பகுதியில்தான் உலகின் மிகப்பெரிய பெலுகா திமிங்கலங்கள் உள்ளன. குறிப்பிட்ட பருவத்தில் அவை சர்ச்சில் முகத்துவாரத்திற்கு வருகின்றன.

67
Churchill Adventure

சர்ச்சில் ஒரு சிறிய நகரமாக இருக்கலாம். ஆனால் இது ஏராளமான சாகசங்களின் நகரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. பல அபூர்வமான அனுபவங்களைத் தந்து பயணத்தை பயனுள்ளதாக்குகிறது.

77
Churchill Experience

சர்ச்சில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இருக்கும் கடினமான வேலை, எந்த இயற்கை அதிசயத்தை முதலில் பார்ப்பது என்பதாகத்தான் இருக்கும். ஒருமுறை சென்றால் வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத பல அனுபவங்களைக் கொடுக்க சர்ச்சில் நகரம் காத்திருக்கிறது.

click me!

Recommended Stories