இந்த எச்சரிக்கை, வெனிசுவேலாவில் அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. தகவல்களின்படி, அமெரிக்காவின் சிறப்புப் படையான டெல்டா ஃபோர்ஸ் ரகசியமாக நாட்டுக்குள் நுழைந்து, அதிபர் மதுரோவும், அவரது மனைவியும் அவர்களின் இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவத்தை மீறி இந்த நடவடிக்கை எவ்வாறு நடத்தப்பட்டது என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சம்பவம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுவேலாவுடன் நெருங்கிய உறவை பேணும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளும் விமர்சனம் தெரிவித்துள்ளன.
இதுவரை இந்தியா அரசு அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, வெனிசுவேலாவிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.