பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் சிறையில் இறந்துவிட்டதாகப் பரவும் தகவல் வதந்தி என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இம்ரான் கானின் மரணச் செய்தி பொய்யானது என்றும், மக்கள் தவறான பிரச்சாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
24
இம்ரான் கான் உயிரிழப்பு என வதந்தி
இம்ரான் கான் இறந்துவிட்டதாகக் கூறும் கடிதம் குறித்து பாகிஸ்தான் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது எனக் கூறி சனிக்கிழமையன்று பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பரவிய ஒரு அறிக்கையில் இம்ரான் கான் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. சந்தேகத்திற்குரிய வகையில் இந்தக் கடிதம் இருந்தது. இம்ரான் கானை ஐ.எஸ்.ஐ கொன்றது போன்ற பல எக்ஸ் பதிவுகளும் இதனுடன் தோன்றின. இம்ரான் கான் சிறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மற்றொரு வதந்தியும் சமீபத்தில் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பரவியது.
34
இம்ரான் கானை விடுவிக்க ஆதரவாளரக்ள் போராட்டம்
இம்ரான் கானை சிறையில் விடுவிக்கக் கோரி அவரது கட்சி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியது. நீண்ட காலமாக சிறையில் இருப்பது இம்ரானின் உடல்நிலையைப் பாதித்துள்ளது என்றும், இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினை காரணமாக அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இம்ரான் கான் தங்கியிருக்கும் அட்யாலா சிறையில் ட்ரோன் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பி.டி.ஐ குற்றம் சாட்டியது. இம்ரான் கா
பாகிஸ்தானின் 19வது பிரதமராக இருந்த இம்ரான் கான் 2018 ஆகஸ்ட் முதல் 2022 ஏப்ரல் வரை பதவியில் இருந்தார். 2025 ஜனவரியில் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அல் காதிர் அறக்கட்டளை நில வழக்கில் பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இம்ரானுடன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தோஷகானா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் சிறையில் இருந்தபோதுதான் புதிய ஊழல் வழக்கிலும் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.