வெள்ளை மாளிகையில் 412 கதவுகளும் 147 ஜன்னல்களும் உள்ளன. ஜன்னல்களில் புல்லட் புரூப், ஷட்டர்புரூப் வசதிகள் கதவுகள் உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஜன்னல்கள் எப்போதும் மூடப்பட்டே இருக்கின்றன. கிரீன் ரூம், ப்ளூ ரூம், ரெட் ரூம் என்ற பெயர்களில் உள்ள அறைகள் பதவியில் உள்ள அதிபரின் விருப்பத்திற்கு ஏற்ப மாறக்கூடியவை. இந்த அறைகளின் நிறங்கள் அதிபர்களின் விருப்பம் போல மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அதிபராக இருப்பவர் இதேபோல வேறு பல மாற்றங்களையும் செய்துகொள்ள முடியும்.