EuroAirport: இந்த ஏர்போர்ட்டுக்குப் போனா ஒரே நேரத்தில் 3 நாடுகளுக்குச் செல்லலாம்!

First Published | Nov 13, 2024, 12:43 PM IST

பிரான்சின் அல்சேஸ் பகுதியில் அமைந்துள்ள யூரோ விமான நிலையம் (EuroAirport Basel-Mulhouse-Freiburg) உலகில் ஒரு தனித்துவமான அதிசயம். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த ஒரே விமான நிலையம் சேவை செய்கிறது.

EuroAirport Basel-Mulhouse-Freiburg

யூரோ விமான நிலையம் (EuroAirport Basel-Mulhouse-Freiburg) உலகில் ஒரு தனித்துவமான அதிசயம். அந்த ஒரே விமான நிலையத்தில் இருந்து மூன்று நாடுகளுக்கு செல்லலாம். சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த ஒரே விமான நிலையம் சேவை செய்கிறது.

EuroAirport Basel-Mulhouse-Freiburg

பிரான்சின் அல்சேஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த விமான நிலையம், சுவிஸ் மற்றும் பிரெஞ்சு சுங்க எல்லைகளை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து, சர்வதேச ஒத்துழைப்பின் சின்னமாக உள்ளது.

Tap to resize

EuroAirport Basel-Mulhouse-Freiburg

விமான நிலையம் பிரெஞ்சு பிரதேசத்தில் அமைந்திருந்தாலும், அது சுவிஸ் மற்றும் பிரெஞ்சு சுங்க மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் தனித்தனி விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றன. விமான நிலையப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரெஞ்சுப் பணியாளர்கள் சுவிஸ் பகுதிக்குள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். சுவிஸ் எல்லைப் பாதுகாப்பு போலீசார் சுவிஸ் பக்கத்தைக் கண்காணித்து வருகிறார்கள்.

EuroAirport Basel-Mulhouse-Freiburg

விமான நிலையத்தின் வெவ்வேறு பகுதியில் யூரோ அல்லது சுவிஸ் ஃபிராங்க்ஸைப் பயன்படுத்தலாம். இதற்காக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

EuroAirport Basel-Mulhouse-Freiburg

இந்த கூட்டு விமான நிலையத்திற்கான யோசனை ஆரம்பத்தில் 1930 களில் உருவானது. ஆனால் இரண்டாம் உலகப் போர் விமான நிலைய கட்டுமானத்தை தாமதப்படுத்தியது. இறுதியாக, 1946ஆம் ஆண்டில், போருக்குப் பிந்தைய ஒத்துழைப்பின் அடையாளமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. சுவிட்சர்லாந்து அதிக நிதியுதவியை வழங்கியது. பிரான்ஸ் மல்ஹவுஸ் அருகே நிலத்தை வழங்கியது.

EuroAirport Basel-Mulhouse-Freiburg

யூரோ விமான நிலையம் தற்போது மூன்று நகரங்களுக்கான முதன்மை நுழைவுப் புள்ளியாக உள்ளது. ஜெர்மனியின் ஃப்ரீபர்க் ஆம் ப்ரீஸ்காவ் (Freiburg), பிரான்சின் மல்ஹவுஸ் (Mulhouse) மற்றும் சுவிட்சர்லாந்தின் பாஸல் (Basel) ஆகிய நகரங்களுக்குச் செல்ல இந்த விமான நிலையம்தான் பயன்படுகிறது. பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தால் நிர்வகிக்கப்படும் இந்த விமான நிலையம் ஜெர்மனியிலிருந்தும் ஆலோசகர்களைக் கொண்டுள்ளது.

EuroAirport Basel-Mulhouse-Freiburg

யூரோ விமான நிலையம் (EuroAirport) சர்வதேச ஒத்துழைப்புக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. அங்கு அரசியல் மற்றும் புவியியல் எல்லைகளை கடந்து பயணிகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு எளிமையாக வந்து செல்கிறார்கள். ஐரோப்பாவின் மையத்தில் உள்ள இந்த விமான நிலையம் மூன்று நாடுகளையும் ஒன்றிணைக்கிறது.

Latest Videos

click me!