கிரிப்டோகரன்சி மூலம் கோடீஸ்வரரான டாக்சி டிரைவர்! ரிஸ்க் எடுத்து சாதித்த நெப்போலியன்!!

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் உலகின் முதல் நாடாக  பிட்காயின் கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் நெப்போலியன் ஒசோரியோ பிட்காயின்கள் மூலம் சம்பாதித்து பணகளகாரராக மாறியுள்ளார்.

El Salvador Taxi Driver Napoleon Osorio becomes the owner of rental vehicles brand using Bitcoin sgb
Cryptocurrency in El Salvador

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிட்காயின் கிரிப்டோகரன்சியை சட்டப்பூர்வமான டிஜிட்டல் பணமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் நயீப் புக்கேலேயின் அரசு முடிவு செய்தது. இந்த அறிவிப்புதான் தனது வாழ்க்கையை மாற்றிவிட்டதாக நெப்போலியன் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

El Salvador Taxi Driver Napoleon Osorio becomes the owner of rental vehicles brand using Bitcoin sgb
El Salvador Taxi Driver

எல் சால்வடார் அதிபர் நயீப் புக்கேலே 3 ஆண்டுகளுக்கு முன்பு, டாலர் மூலம் பணம் அனுப்பும் முறைக்கு மாற்றாக பிட்காயினை சட்டப்பூர்வமாக புழக்கத்தில் கொண்டுவருவதாக அறிவித்தது. கிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய நிறுவனங்களின் நிலையற்ற தன்மை பற்றிய எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், எல் சால்வடார் நாட்டு மக்கள் பல மில்லியன் டாலர் வரிப் பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தார்.

Tap to resize


Cryptocurrency

இதன் விளைவாக நெப்போலியனின் வாழ்க்கையே மாறிவிட்டது. "முன்பு நான் வேலையில்லாமல் இருந்தேன்... இப்போது எனது சொந்தத் தொழில் இருக்கிறது" என்று கூறுகிறார் 39 வயதான தொழிலதிபர் நெப்போலியன் ஒசோரியா. முதலில் வாடகைக் கார் ஒட்டிவந்த அவர் பிட்காயின் மூலம் சவாரிகளுக்குப் பணம் செலுத்தும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

My First Bitcoin John Dennehy

இதன் மூலம் விரைவில் பணம் சம்பாதிக்கத் தொடங்கிய நெப்போலியன், இப்போது சொந்தமாக வாடகை கார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மை ஃபர்ஸ்ட் பிட்காயின் என்ற என்ஜிஓவின் அமெரிக்க நிறுவனர் ஜான் டென்னேஹி தான் வாடிக்கையாளர்களிடம் கிரிப்டோகரன்சி மூலம் கட்டணத்தைப் பெறும் முறையை பயன்படுத்த ஊக்கம் அளித்தார் என்று ஒசோரியோ பாராட்டுகிறார்.

El Salvador Bit-Driver

நெப்போலியன் ஒசோரியா இப்போது நடத்திவரும் பிட்-டிரைவர் வாடகை கார் நிறுவனத்தில் 21 ஓட்டுநர்கள் பணிபுரிகிறார்கள். கிரிப்டோகரன்சி மூலம் நான்கு புதிய கார்களை வாங்கும் அளவுக்கு முன்னேறி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Napoleon Osorio

மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தன் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவரும் ஒசோரியா அவர்களின் கல்விச் செலவுக்கு இனி சிரமப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கிறார்.

El Salvador President Nayib Bukele

செப்டம்பர் 7, 2021 அன்று பிட்காயினை சட்டப்பூர்வமாக்குவதாக அறிவித்த அதிபர் புக்கேல், வங்கிகளைப் பயன்படுத்தாத 70 சதவீத எல் சால்வடோர் மக்களை கிரிப்டோகரன்சி நிதி அமைப்பிற்குள் கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். உடனடியாக வரிப் பணத்தை கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்யத் தொடங்கினார்.

El Salvador Chivo Wallet App

நாட்டு மக்களை பிட்காயினைப் பயன்படுத்தத் தூண்டுவதற்காக சிவோ வாலட் (Chivo Wallet) என்ற மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கினார். இதன் மூலம் அந்நாட்டு மக்களுக்கு இலவசமாக பிட்காயினை அனுப்பவும் பெறவும் வசதி கிடைத்தது. இந்தச் செயலியில் இணையும் ஒவ்வொரு புதிய பயனருக்கும் 30 டாலர் போனஸ் தொகையும் கிடைத்தது.

El Salvador and IMF

கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்துவதால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) எல் சால்வடாருக்கு 1.3 பில்லியன் டாலர் கடன் வழங்குதற்கு தயங்கியது. ஆனால் கடந்த ஆகஸ்டில், எல் சால்வடாருடன் ஆரம்ப கடன் ஒப்பந்தத்தை அறிவித்தது. அதே நேரத்தில் சாத்தியமான அபாயங்களை குறைக்கவும் எல் சால்வடார் அரசை எச்சரித்துள்ளது.

Cryptocurrency in India

இந்திய அரசாங்கம் கிரிப்டோகரன்சி துறையை ஆய்வு செய்து கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த பரிசீலித்து வருகிறது.  கிரிப்டோ கரன்சியை நாணயங்கள் என்று குறிப்பிட முடியாது என்றும் கிரிப்டோ கரன்சிகளுக்கு அடிப்படை மதிப்பு இல்லை என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கருதுகிறது. பிட்காயின்கள் போன்ற கிரிப்டோ கரன்சிகள் நிதி அமைப்புகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என உலகளாவிய நாடுகள் கருதுகின்றன.

Latest Videos

click me!