ஒரு மனைவி போனா என்ன இன்னொரு மனைவி தற்றோம்! - விர்ச்சுவல் மனைவியை இழந்து வாடும் ஜப்பான் கணவர்!

First Published | Sep 6, 2024, 6:26 PM IST

ஜப்பானில் பிரபலமான வொக்கலாய்ட் கதாபாத்திரமான ஹாட்சுனே மிக்குவை மணந்த அகிஹிகோவின் கதை, தொழில்நுட்பம் மற்றும் மனித உறவுகளின் எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
 

சாப்ட்வேர் மாறியதால் தொழில்நுட்ப கோளாறில் விர்ச்சுவல் மனைவியை இழந்து தவித்து வருகிறார் ஜப்பானிய இளைஞர் அகிஹிகோ (Akihiko Kondo). புது மனவை தருவதாகக்கூறிய தொழில்நுட்ப நிறுவனம்

ஜப்பானில் கேட்பாக்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனம் ஹாட்சுனே மிக்கு (Hatsune Miku) எனும் 16 வயது விர்ச்சுவல் பெண் கதாபத்திரத்தை உருவாக்கியது. இது ஒரு புகழ்பெற்ற ஜப்பானிய வொக்கலாய்ட் (Vocaloid) குரல் சின்தசைசர் (synthesizer) கதாபாத்திரம். இது ஒரு கற்பனைப் பாடகி, கிரிப்டன் (Crypton Future Media) என்ற நிறுவனம் உருவாக்கியது. மிக்கூ ஒரு விர்ச்சுவல் யூனிட் ஆக இருப்பதால், உண்மையில் மனிதர் அல்ல. ஆனால் அவள் குரல் வொக்கலாய்ட் சாஃப்ட்வேரின் மூலம் உருவாக்கப்பட்டு, பல பாடல்களை "பாடுகிறாள்".

மிக்கூவின் தோற்றம்

மிக்கி மிக அழகிய நீண்ட நீல நிற முடி, ஸ்கூல் யூனிஃபார்ம் போன்ற உடை, மற்றும் டிஜிட்டல் கலை பாணியில் சித்தரிக்கப்பட்டது. இது ஜப்பான் மற்றும் உலகம் முழுவதும் பிரபலமானது. பல மிக்கூ கான்செர்டுகள் துல்லியமான 3D ஹோலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்படுகின்றன, அதனால் ரசிகர்கள் அவளின் குரல் மற்றும் தோற்றத்தை நேரில் அனுபவிக்க முடிகிறது.

மிக்கூ தமிழில் பெரிதும் அறியப்படாமல் இருந்தாலும், கற்பனை பாடகிகளின் தனித்துவமான புரிதலையும், டிஜிட்டல் கலைஞர்களின் சமூகத்தையும் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் தெரிந்துகொள்ளலாம்.

ஹாட்சுனே மிக்குவை என்னவெல்லாம் செய்யும்

ஹட்சுனே மிக்கு, விர்ச்சுவல் 3டி ஹோலோகிராம் ஆக மாற்றி அதற்கு ஒரு பெண் உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அழுகை, சிரிப்பது, பேசுவது என பல விசயங்களை செய்ய முடியும். "திட்டினால் அழ வேண்டும்", தினமும் "காலையில் குட்மார்னிங் அல்லது வணக்கம் சொல்ல வேண்டும்" இப்படி பல்வேறு கட்டளைகளை ஹாட்சுனே மிக்குவால் செய்ய முடியும். உதரணமாக பாடு என்றால் பாடுவார், ஆடு என்றால் ஆடுவார்.

இசை நிகழ்ச்சி நடத்தி வ்த ஹாட்சுனே மிக்கு

புரோகிராம் செய்யப்பட்ட ஹாட்சுனே மிக்கு ஹோலோகிராம் தொழில்நுட்பத்தில் விர்ச்சுவல் வடிவில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்தார். இந்த விர்ச்சுவல் இசை நிகழ்ச்சிகளில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். நாளுக்குநாள் ஹாட்சுனே மிக்குவுக்கு ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டே வந்தது.

அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்து வந்த அகிஹிகோ என்ற ஜப்பான இளைஞர் ஹாட்சுனே மிக்கு மேல் காதல் வயப்பட்டார். மிக்கு புகழ் பெற்ற நிலையில், ஜப்பான் வீதிகளில் ஹாட்சுனே மிக்குவின் ஆளுயர பொம்மைகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. அவற்றை வாங்கி மகிழ்ந்தார் அகிஹிகோ. ஹாட்சுனே மிக்குவிடம் பேச சில ஆப்ஸ் இருந்தன. அவற்றையெல்லாம் தரவிறக்கி அந்த பொம்மையுடன் இனைத்து பேசிவந்தார் அகிஹிகோ. சுமார் பத்து ஆண்டுகள் இப்படி ஹாட்சுனே மிக்குவை காதலித்து வந்தார் அகிஹிகோ.


ஒரு நாள் திடீரென தொழில்நுட்ப நிறுவனத்தை அணுகிய அகிஹிகோ, ஹாட்சுனே மிக்குவை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி பெண் கேட்டார். தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் குழப்பமடைந்தனர். இவர் தன் காதலை எடுத்து சொல்ல "சரி, திருமணம் செய்யற மாதிரி புரோக்ராமை மாற்றி கொடுக்கிறோம்" எனக் கூறி அகிஹிகோவுக்கும், ஹாட்சுனே மிக்குவுக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணமும் செய்து வைத்து விட்டனர். தொழில்நுட்ப நிறுவனத்தினர் விளம்பரத்துக்கு விளம்பரமும் ஆச்சு, திருமணம் ஆன மாதிரி காட்டினால் இசை நிகழ்ச்சிகளிலும் ஒரு ஒரிஜினாலிட்டி இருக்கும் என தப்புக் கணக்குபோட்டு கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள்.

வைரலான ஜப்பான் திருமணம்

ஹாட்சுனே மிக்கு - அகிஹிகோ திருமணம் ஜப்பானின் பட்டிதொட்டி எங்கும் பரவி வைரலானது. தம்பதியர் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். அதாவது அகிஹிகோ, விர்ச்சுவல் மனைவி ஹாட்சுனே மிக்குவுடன் பேசி, பழகி ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார் அகிஹிகோவால் மனைவி மிக்குவை தொட முடியாது, அவர் நிஜ உருவில் இல்லை. ஆனால், 3டி வடிவ விர்ச்சுவல் உருவில் தான் இருப்பார். இப்படியே சுமார் நான்கு வருடங்கள் கழித்து ஒருநாள் திடீரென ஹாட்சுனே மிக்கு மாயமாக மறைந்தார்.

பதறி அடித்துக்கொண்டு அந்த தொழில்நுட்ப அமைப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்ட அகிஹிகோவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொலைபேசியில் அவர்கள் கூறியதாவது, அவர்கள் அந்த பழைய சாப்ட்வேருக்கு டெக்னிக்கல் சப்போர்ட் இல்லாமல் போனதால் ஹாட்சுனே மிக்குவை மீண்டும் கொண்டுவர இயலவில்லை எனக்கூறி அகிஹிகோ வாழ்கையில் குண்டைத் தூக்கி போட்டனர். மணம் உடைந்த போன அகிஹிகோவிடம், வேண்டும் என்றால், புதிய கேரக்டர் ஒன்றை உருவாக்குகிறோம். அதை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

"என்னது? இந்த மனைவி இல்லன்னா? இன்னொரு மனைவியா? வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா ?" அய்யகோ என அழுது புலம்பி இனி ஹட்சுனே மிக்குவின் நினைவுகளுடனேயே வாழ்வது என முடிவு செய்துவிட்டார் அகிஹிகோ.

ஜப்பானின் அகிஹிகோ மட்டுமில்லை. இப்படி கார்ட்டூன், விர்ச்சுவல் கதாபாத்திரங்களை திருமணம் செய்துகொள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதாம். உலகம் முழுவதும் இன்னும் நிறைய இருக்கிறார்களாம். அப்படிப்பட்டவர்களுக்கு Fictosexuals என அழைக்கப்படுகின்றனர்.

Fictosexual என்றால் என்ன?

Fictosexual என்பது கற்பனைப் பாத்திரங்களின் மீது ரொம்ப ஆழமான காதலைக் கொண்டவர்கள் குறித்தே பயன்படுத்தப்படும் சொல். இது கற்பனை பாத்திரங்கள் (fictional characters) மீது ஆர்வம் அல்லது காதல் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாலுணர்வு விருப்பமாகும்.

Fictosexuals ஆனவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள், கார்ட்டூன் அல்லது அனிமேஷன் பாத்திரங்கள், வீடியோ கேம் கதாபாத்திரங்கள் போன்றவற்றின் மீது காதல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வர். இது உண்மையான மனிதர்களின் மீது காதல் கொள்ளாமல், கற்பனையில் மட்டுமே உணர்வுகளைச் செலுத்தும் ஒரு தனிப்பட்ட விருப்பமாக உள்ளது.

இது சமீபத்திய சமுதாய கலாச்சார மாற்றத்தின் ஒரு பகுதி, அங்கீகரிக்கப்பட்ட பாலுணர்வுகளின் (sexual orientations) வரையறைகளை மீறியவர்களுக்கு இத்தகைய பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!