அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்
அதிபர் வேட்பாளர்கள் ஒவ்வொரு மண்டலமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் மத்தியில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இரண்டு பேருக்கும் இடையே நேரடி விவாதங்களும் நடைபெற்றுள்ளது. இதனிடையே அதிபர் வேட்பாளராக போட்டியிடக்கூடிய டொனால்ட் டிரம்ப்க்கு கொலை மிரட்டல்க்ள அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி பென்சில்வேனியாவில் டொனால்டு டிரம்பின் பிரசார பொதுக்கூட்டத்தில் பாய்ந்த தோட்டாக்களில் ஒன்று அவரை உரசிவிட்டுச் சென்றது. இதனால் அவரது உடலில் இருந்து ரத்தம் வெளியேறியது. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.