மறக்குமா நெஞ்சம்! : 9/11 அமெரிக்க இரட்டை கோபுரம் - வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்!

First Published | Sep 11, 2024, 5:04 PM IST

செப்டம்பர் 11 தாக்குதல்கள், பொதுவாக 9/11 என குறிப்பிடப்படுகிறது, செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் நடத்தப்பட்டதன் 23 ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 
 

இரட்டை கோபுரம் தாக்குதல் (Twin Tower Attack) 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல். இன்றும் மறக்க முடியவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் அடுத்தடுத்து விமானங்கள் மோதி அழிக்கப்பட்டன

இரட்டை கோபுர தாக்குதல் குறித்து பல சர்ச்சைகள், உண்மைகள் மற்றும் அறியப்படாத விவரங்கள் இன்றும் உள்ளன. சில முக்கியமாக மறக்கப்பட்ட அல்லது பொதுமக்களுக்கு பரவலாக தெரியாத உண்மைகள் இதோ...

முதல் தாக்குதல் (1993):

2001-ம் ஆண்டின் தாக்குதலுக்கு முன்னர், 1993-ல் உலக வர்த்தக மையம் (WTC) கீழ் தளம் தாக்குதலுக்கு உள்ளாகியது. எக்ஸ்பிளோசிவ் நிறைந்த ஒரு லாரி இரட்டை கோபுரத்தின் கீழ் தளம் (basement) பகுதியை வெடிக்கச் செய்தது. இந்தத் தாக்குதலின் நோக்கம், கோபுரங்களை சாய்க்கச் செய்வதாக இருந்தது, ஆனால் அது பெரிய அளவிலான சேதத்தை விளைவிக்கவில்லை. இந்த தாக்குதல் எதிர்கால அச்சுறுத்தலுக்கான முந்தைய எச்சரிக்கையாக இருந்தது.

தாக்குதலுக்கு முன் இரு எச்சரிக்கை

2001 தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள், குறிப்பாக FBI மற்றும் CIAவுக்கு, சில குறிப்பிட்ட எச்சரிக்கைகள் கிடைத்தன. ஆயினும், பாதுகாப்பு அமைப்புகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் இப்போதும் உள்ளன.

உண்மையான பாதிப்பு:

2001 செப்டம்பர் 11 ஆம் தேதி, அந்த நாளில் சந்தோஷமாக தொடங்கிய அந்த காலைவேளையில் அமெரிக்காவின் வர்த்தக மையத்தில் வேலைக்காக மக்கள், பணியாளர்கள் இங்கும் அங்கும் பம்பரம் போல் ஓடிக்கொண்டிருந்தனர்.

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் குழு ஒன்று, நான்கு வணிக விமானங்களை கடத்தி, வேன்றுமென்றே நியூயார்க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள வேர்ல்ட் டிரேட் சென்டரின் (உலக வர்த்தக மையம்) வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்கள் மீது மோதவிட்டனர்.

Tap to resize

முதலில் வடக்கு கோபுரத்தின் மீது ஒரு விமானம் மோதியது. அடுத்த சில நிமிடங்களில் அடுத்த விமானம் ஒன்று தெற்கு கோபுரத்தின் மீது மோதியது. இதில், அந்த இரட்டை கோபுரம் சீட்டு கட்டுபோல் சரசரவென சரிந்தது.

இந்த பயங்கரவாதத்தாக்குதலில்,தாக்குதலில் 2,977 பேர் உயிரிழந்தனர். பென்டகன் மீதான தாக்குதலில் 184 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பென்சில்வேனியாவில் நடந்த விபத்தில் 40 பயணிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் பலர் சுவாசம் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்குவதற்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்து வரும் இராணுவ மோதல்களுக்கும் வழிவகுத்துவதும் இந்த தாக்குதல்கள் உலக அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் தேசிய பாதுகாப்பில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூறையாக செயல்பட்டவர் யார் தெரியுமா?

2011 ஆம் ஆண்டில் அமெரிக்க கடற்படை சோதனையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தலைமையிலான பயங்கரவாதிகள் குழு இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியது. குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருளாதார மற்றும் இராணுவ சக்தியின் சின்னங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. 9/11 தாக்குதல்கள் அமெரிக்காவில் பாதுகாப்பு நடவடிக்கைள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகே, அமெரிக்காவில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உருவாக்கப்பட்டது.

இரட்டை கோபுரம் (World Trade Center) தாக்குதலுகுப் பின்னர், அந்த இடம் "கிரவுண்ட் ஸீரோ" (Ground Zero) என்று அழைக்கப்பட்டு வருகிறது. தாக்குதலுக்குப் பின்னர் இது மொத்தமாக அழிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. தற்போது, அங்கு நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் மக்கள் அங்கு கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதே இடத்தில் புதியதொரு கட்டிடத் தொகுப்புகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன. முக்கியமாக, ஒன் வேர்ல்டு டிரேட் சென்டர் (One World Trade Center) என்னும் புதிய உயரமான கோபுரம் கட்டப்பட்டது. இது 1,776 அடி (541 மீட்டர்) உயரம் கொண்டுள்ளது. , இது அமெரிக்காவின் மிக உயரமான கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

9/11 தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நினைவுப் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் (9/11 Memorial and Museum) ஒன் வேர்டு டிரேட் சென்டர் அருகேயுள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் தாக்குதலில் அழிக்கப்பட்ட இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் இரண்டு பெரிய நீர் பவுன்டேசன் அமைக்கப்பட்டுள்ளன. (reflecting pools), இது அந்நாள் நினைவுகளை இன்றும் சுமந்து நிற்கின்றன.

மேலும், அங்கு பல புதிய காப்புறுதி மற்றும் வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன, மேலும் பல நிறுவனங்களின் தனித்தனி அலுவலகங்கள், சுவையான உணவகங்கள் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. இறுதியாக, அந்த இடம் தற்போது அமைதி, நினைவகம் மற்றும் அமெரிக்காவின் புதுமைகளை பிரதிபலிக்கும் இடமாக மாறியுள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல்கள், பொதுவாக 9/11 என குறிப்பிடப்படுகிறது, செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் தொடர் சம்பவங்கள்.

Latest Videos

click me!