பஹல்காம் படுகொலைக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளிப்பது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அதிபரை சந்தித்த சீன தூதர், தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார். பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு ADB உதவியை நிறுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
பஹல்காம் படுகொலைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளது. இன்று, அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியாவின் முப்படைகளும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதி. இதில், பயங்கரவாதிகள் 90 பேர் மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இன்றும், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பாகிஸ்தான், இந்தியாவின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்து இருந்தது. ‘தெற்காசியாவில் அமைதிக்காக பாகிஸ்தானை நாங்கள் எப்போதும் ஆதரிப்போம்’ என்று முன்பு சீனா தெரிவித்து இருந்தது.
பாகிஸ்தான் அதிபர் அலி ஜர்தாரியை சந்தித்த சீன தூதர் ஜியாங் ஜெய்டாங், ‘சீனா-பாகிஸ்தான் நட்பு நீடித்தது. காலத்திற்கேற்ப சோதனைக்கு உள்ளானாலும், சவாலான காலங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வருகிறோம். தெற்காசிய அமைதிக்காக பாகிஸ்தானுக்கு எங்கள் ஆதரவு உள்ளது’ என்று தெரிவித்து இருந்தார்.
36
இந்தியா மீது பாகிஸ்தான் அதிபர் அலி ஜர்தாரி குற்றச்சாட்டு
இதற்கு ஜர்தாரி, ‘இந்தியா பொறுப்பற்ற மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என்று சீன தூதரிடம் கூறினார்.
பஹல்காம் படுகொலைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தீவிரவாதத்தை எதிர்த்து வருகிறோம். பிராந்தியத்தின் அமைதி, நிலைத்தன்மை மிகவும் முக்கியமானது என்று சீனா தெரிவித்துள்ளது. இப்படி ஒரு பக்கம் பாகிஸ்தானை வளர்த்து விட்டு, மறுபக்கம் அமைதி வேண்டும் என்று சீனா கபட நாடகம் ஆடி வருகிறது.
56
பாகிஸ்தானுக்கு நிதி உதவியை நிறுத்துங்கள்
பஹல்காம் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான ராஜதந்திர நிலைப்பாட்டை எடுத்துள்ள இந்தியா, ADBயிடம் பாகிஸ்தானுக்கு நிதி உதவியை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்து இருந்தது.
66
நிர்மலா சீதாராமன்
சமீபத்திய கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ADB தலைவர் மசாடோ கண்டாவிடம் இதுகுறித்து பேசியுள்ளார். இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிடம் நிதியமைச்சர் இதுகுறித்து ஏற்கனவே பேசியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.