டிரம்பைச் சந்திக்க சூட் அணியாமல் வந்தது ஏன்? ஜெலென்ஸ்கி சொன்ன பளிச் பதில்!

Published : Mar 01, 2025, 05:45 PM ISTUpdated : Mar 01, 2025, 06:09 PM IST

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, டொனால்டு டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் அதிருப்தி தெரிவித்ததால் ஜெலென்ஸ்கி அதிருப்தியுடன் வெளியேறினார். ஜெலென்ஸ்கியின் ஆடை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

PREV
16
டிரம்பைச் சந்திக்க சூட் அணியாமல் வந்தது ஏன்? ஜெலென்ஸ்கி சொன்ன பளிச் பதில்!
Donald Trump  Volodymyr Zelensky meeting

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அரிய கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்த ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஓவல் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

26
Donald Trump  Volodymyr Zelensky meeting

டிரம்ப் - ஜெலென்ஸ்கி இடையேயான இந்தச் சந்திப்பு மோசமான முடிவுக்கு வந்ததிருக்கிறது. ஜெலென்ஸ்கி உக்ரைன் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்று டிரம்ப் கடுமையாகக் குற்றம்சாட்டினார். அமெரிக்கா செய்துவரும் உதவிகளுக்காக நன்றியோடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனால், ஜெலென்ஸ்கி அதிருப்தியுடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

கோபமாக கத்திய டிரம்ப்! பாதியில் வெளியேறிய ஜெலன்ஸ்கி! வெள்ளை மாளிகையில் நடந்தது என்ன?

36
Donald Trump  Volodymyr Zelensky meeting

இந்தச் சந்திப்பின்போது பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன், ஜெலென்ஸ்கி அணிந்திருந்த உடை பேசுபொருளானது. அமெரிக்காவின் உயர்மட்ட அலுவலகமான வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு ஏன் சூட் அணிந்து வரவில்லை என்று ஒரு செய்தியாளர் ஜெலென்ஸ்கியிடம் கேள்வி எழுப்பினார்.

46
Donald Trump  Volodymyr Zelensky meeting

"நீங்க ஏன் சூட் போடல? உங்ககிட்ட சூட் இருக்கா?" என்று செய்தியாளர் கேட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் அப்போது இருந்தனர்.

"உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?" என்று ஜெலென்ஸ்கி செய்தியாளரை நோக்கி பதிலடி கொடுத்தார். "ஓவல் அலுவலகத்தின் டிரஸ் கோடை (Dress code) மதிக்காதவர்களால் நிறைய அமெரிக்கர்களுக்கு இது ஒரு பிரச்சனைதான்" என்று செய்தியாளர் பதிலளித்தார்.

சண்டை போட்ட டிரம்ப், ஜெலென்ஸ்கி : வெளியான ரகசியத்தால் வந்த வினை!

56
Donald Trump  Volodymyr Zelensky meeting

2022 இல் வெடித்த ரஷ்யா-உக்ரைன் போர் முடிந்ததும், தானும் சூட் அணிவேன் என்று ஜெலென்ஸ்கி கூறினார் . "இந்தப் போர் முடிந்ததும் நான் சூட் அணிவேன். ஒருவேளை அது உங்களுடையதைப் போலவேகூட இருக்கலாம். ஒருவேளை அதைவிடச் சிறந்ததாகவும் இருக்கலாம். எனக்குத் தெரியாது, பார்ப்போம். மலிவான ஏதாவது ஒன்றாகவும் இருக்கலாம். நன்றி" என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

அப்போது, டிரம்பும் உரையாடலில் கலந்துகொண்டு, ஜெலென்ஸ்கியின் உடை தனக்குப் "பிடித்திருந்தது" என்று கூறினார்.

66
Donald Trump  Volodymyr Zelensky meeting

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இதுபோல சூட் அணியாமல் பிற நாட்டுத் தலைவர்களைச் சந்திப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்பே மற்ற நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்புகளிலும், 2023 இல் ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றும்போதும் ஜெலென்ஸ்கி சூட் இல்லாத உடையைத்தான் அணிந்திருந்தார்.

இருப்பினும், பல சமூக ஊடக பயனர்கள், டிரம்பின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கைப் பற்றிப் பேசினர், மேலும் அவர் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு டி-சர்ட் மற்றும் பேஸ்பால் தொப்பியில் செல்வதாகக் கூறினர்.

தங்கத்தை எந்த வடிவத்தில் வாங்கினால் அதிக லாபம்? முதலீட்டாளர்கள் இதை ட்ரை பண்ணுங்க!

Read more Photos on
click me!

Recommended Stories