
இன்டர்நெட் முடங்குகிறதா?
அமெரிக்காவை சேர்ந்த 'தி சிம்ப்சன்ஸ்'என்ற நிறுவனம் உலகம் முழுவதும் ஜனவரி 16ம் தேதி (இன்று) இன்டர்நெட் முடங்கும் என்று கார்ட்டூன் வெளியிட்டு இருப்பதாக இணையத்தில் வேகமாக பரவியது. இன்று உலகம் முழுவதும் இணைய சேவை உயிர்நாடியாக இருக்கும் நிலையில், அது முடங்கி விட்டால் என்ன செய்ய முடியும்? என்று கடந்த இரண்டு நாட்களாக இணையவாசிகள் புலம்பித் தவித்து வந்தனர்.
'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூன் நிறுவனமே சொல்லி விட்டதால் இன்று இணையம் முடங்கி விடும் என்று பலர் உறுதியுடன் சொல்லி வந்தனர். ஏனெனில் 'தி சிம்ப்சன்ஸ்' கார்ட்டூன் நிறுவனம் புகழ்பெற்ற கார்ட்டூன் எபிசோடுகளுக்கு பெயர் பெற்றது. கடந்த 1989ம் ஆண்டில் இருந்து கார்ட்டூன் எபிசோடுகளை ஒளிபரப்பி வரும் 'தி சிம்ப்சன்ஸ்'இதுவரை 700 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பி விட்டது.
எதிர்காலத்தை கணிக்கும் சிம்ப்சன்ஸ்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 'தி சிம்ப்சன்ஸ்' ஒளிபரப்பாகும் எபிசோபிடுகள் அனைத்தும் எதிர்காலத்தில் அப்படியே உண்மையில் நடந்து வருகிறது. அமெரிக்கா இரட்டை கோபுரம் தாக்குதல் மற்றும் கொரொனா வைரஸ் பரவல் குறித்து 'தி சிம்ப்சன்ஸ்' முன்பே கணித்து கார்ட்டூன் வெளியிட்டு இருந்தது. இவை இரண்டும் அப்படியே நடந்தன. மேலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் பதவியேற்பார் என முன்கூட்டியே கணித்து கார்ட்டூன் எபிசோட் வெளியிட்டது. அதுவும் உண்மையானது.
காசாவில் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்! 15 மாத சண்டை முடிவுக்கு வருகிறது!
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ
இதுமட்டுமின்றி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு வாரத்துக்கும் மேலாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதன் காரணமாக 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 40,000 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. 12,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. பல லட்சம் கோடி டூபாய் இழப்பும் ஏற்படுள்ளது. இப்படி லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ ஏற்படும் என்று 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிம்ப்சன்ஸ் கார்ட்டூன் எபிசோட் வெளியிட்டு இருந்தது தான் இதில் அதிரவைக்கும் விஷயமாகும்.
உண்மை என்ன?
எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் சிம்ப்சன்ஸ் இன்று உலகம் முழுவதும் இணையம் முடங்கும் என முன்கூட்டியே கார்ட்டூன் வெளியிட்டதாக கூறப்படுவதால் உலக நெட்டிசன்கள் உண்மையிலேயே பயந்து போனார்கள். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் கார்ட்டூன் படத்தை வெளியிட்ட சிம்ப்சன்ஸ், ஜனவரி 16 (இன்று) இண்டர்நெட் இருக்காது என்று கூறியுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் இன்று இப்போது வரை உலகத்தில் இணையம் எங்கும் முடங்கியது என்ற செய்தி ஏதும் வரவில்லை.
ஆகையால் இணையத்தில் பரவும் சிம்ப்சன்ஸ் வீடியோ உண்மையில்லை என்று தெரியவருகிறது. அதாவது சிம்ப்சன்ஸ் வீடியோ போல் எடிட் செய்யப்பட்டு இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஏனெனில் டிரம்ப் பதவியேற்பு விழா நடைபெறும் ஜனவரி 16ம் தேதி இணையச் சேவை முடங்கும் என்பது போல இருக்கிறது. ஆனால் டிரம்ப் ஜனவரி 20ம் தேதி தான் அதிபராகப் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்தின் சரிவுக்கு காரணமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடல்!