உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது? இந்தியாவுக்கு எந்த இடம்?

First Published | Jan 13, 2025, 12:47 AM IST

உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் எவை? ஒரு குறிப்பிட்ட நாட்டின் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கும் இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் உலகின் டாப் 10 பாஸ்போர்ட்டுகள் எவை என்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டிற்கான சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தரவரிசையின்படி சிங்கப்பூர் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் விசா தேவையில்லாமல் 195 இடங்களுக்குப் பயணிக்க முடியும்.

ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில், உலகின் வலிமையான பாஸ்போர்ட்கள் பட்டியலில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமலே 193 நாடுகளுக்குச் செல்லலாம்.

பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென் கொரியா மற்றும் ஸ்பெயின் ஆகியவை மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த ஆறு நாடுகளின் பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல் 192 நாடுகளுக்குச் செல்ல முடியும்.

Tap to resize

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவை உலகின் 4வது வலிமையான பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளன. இந்த நாடுகளில் ஏதேனும் ஒரு பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

பெல்ஜியம், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் ஆகியவை உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளன. இந்த ஐந்தில் ஏதேனும் ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் 190 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஆஸ்திரேலியாவும் கிரீஸும் கூட்டாக 6வது இடத்தைப் பிடித்துள்ளன. ஆஸ்திரேலியா அல்லது கிரீஸ் நாடுகளின் பாஸ்போர்ட் 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கிறது.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் கனடா, மால்டா, போலந்து ஆகிய மூன்று நாடுகள் 7வது இடத்தைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் நீங்கள் 188 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.

UAE passport is the most powerful passport in the world

செக்கியா, ஹங்கேரி ஆகியவை உலகின் 8வது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களைக் கொண்டுள்ளன. செக்கியா அல்லது ஹங்கேரியின் பாஸ்போர்ட் மூலம் 187 இடங்களுக்கு விசா இல்லாமலே போக முடியும்.

அமெரிக்கா, எஸ்டோனியா ஆகியவை 9வது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்டவை. அமெரிக்கா அல்லது எஸ்டோனியாவின் பாஸ்போர்ட் மூலம் 186 நாடுகளை விசா இல்லாமல் சுற்றுப் பார்க்கலாம்.

லாட்வியா, லிதுவேனியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் பாஸ்போர்ட்டுகள் இந்தப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நான்கு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவருக்கு 185 நாடுகளில் விசா இல்லாமல் அனுமதி கிடைக்கும்.

இந்தப் பட்டியலில் இந்தியா எங்கே இருக்கிறது? உலகின் முதல் 50 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளில் கூட இந்தியா இடம்பெறவில்லை! 57 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாத அணுகலை வழங்கும் இந்தியாவின் பாஸ்போர்ட் 85வது இடத்தில் உள்ளது.

Latest Videos

click me!