திபெத் நிலநடுக்கத்தில் 53 பேர் பலி; உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள் என்னென்ன?

First Published | Jan 7, 2025, 2:03 PM IST

திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 பேர் பலியாகி விட்டனர்.  உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

Tibet Earthquake

திபெத்தில் நிலநடுக்கம் 

ஆசிய நாடான திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம் - திபெத் எல்லைக்கு அருகில் உள்ள ஜிஜாங் என்ற பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 புள்ளிகளாக பதிவானது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலடுக்கத்தில் சிக்கி இதுவரை 53 பேர் பலியாகி விட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் திபெத்தின் அண்டை நாடான நேபாளம், சீனா, இந்தியாவின் பல்வேறு இடங்களில் உணரப்பட்டது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், உலகம் முழுவதும் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

World Biggest Earthquakes

மிகப்பெரிய நிலநடுக்கங்கள் 

ஷாங்க்சி நிலநடுக்கம்: 1556 ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்க்சியில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக 8,30,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதான் உலகில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கமாகும். 

டாங்ஷான் நிலநடுக்கம்: 1976 ஆம் ஆண்டு சீனாவின் டாங்ஷானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,42,000 முதல் 6,55,000 பேர் வரை கொல்லப்பட்டனர். 

சிங்கப்பூர் ஆண்களை போலி திருமணம் செய்யும் வெளிநாட்டு பெண்கள்; அதிகரிக்கும் sham marriages; என்ன காரணம்?
 

Tap to resize

China Earthquake

2004ல் சுனாமி 

இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்: கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சுனாமியால் இந்தியா, இலங்கை உள்பட 14 நாடுகளை சேர்ந்த சுமார் 2,27,898 மக்கள் கொல்லப்பட்டனர்.

ஹையுவான் நிலநடுக்கம்: 1920ஆம் ஆண்டு சீனாவின் ஹையுவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 273,400 பேர் கொல்லப்பட்டனர்.

சிலி நிலநடுக்கம்: 1960 ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டனர். இதனால் உருவான சுனாமி பேரலை பெரும் அழிவை உண்டாக்கியது. 

Japan Earthquake

ஜப்பான் நிலநடுக்கம் 

கான்டோ நிலநடுக்கம்: 1923ஆம் ஆண்டு ஜப்பானின் காண்டோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 142,800 பேர் இறந்தனர்.

ஹைட்டி நிலநடுக்கம்: 2010ம் ஆண்டு ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1,60,000 உயிர்களை காவு வாங்கியது. 

கம்சட்கா நிலநடுக்கம்: 1952ல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சுமார் 15,000 பேர் கொல்லப்பட்டனர்.

தோஹோகு நிலநடுக்கம்: கடந்த 2011ம் அண்டு ஜப்பானின் தோஹோகு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதனால் உண்டான சுனாமியால் சுமார் 15,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியினர். 

ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா.. பிரதமர் ரேஸில் இந்திய வம்சாவளி.. யார் இந்த அனிதா ஆனந்த்?
 

Latest Videos

click me!